தமிழ், ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ் இன்னமும் குறிப்பிட்ட ஒரு நடிகரின் சம்பளத்தை தாண்ட முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறாராம். இத்தனைக்கும் அவர் உருவாக்கி விட்டவர் தான்.
தனுஷின் சினிமா வளர்ச்சி சமீபகாலமாக அபாரமாக உள்ளது. தமிழில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் அடுத்தடுத்து இந்தி மற்றும் ஹாலிவுட் சினிமாக்களில் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் ஹிந்தியில் இரண்டாவது படம் ஹாலிவுட்டில் இரண்டாவது படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் ஹாலிவுட்டில் டாப் இயக்குனராக வலம் வரும் ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள்தான் அவஞ்சர்ஸ் படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி நாளுக்கு நாள் புகழின் உச்சிக்குக் சென்று கொண்டிருக்கும் தனுஷ் வெறும் தமிழ் சினிமாவில் மட்டும் மார்க்கெட்டை வைத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை மிஞ்ச முடியவில்லை என்ற வருத்தத்தில் உள்ளாராம்.
தனுஷ் உலக சினிமாவுக்கே சென்றாலும் தமிழ் சினிமாவில் தனக்கென பெரிய அளவு மார்க்கெட்டை உருவாக்க முடியாமல் தடுமாறி வருகிறார். தற்போதுதான் கர்ணன், அசுரன் போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
ஆனால் சிவகார்த்திகேயன் தமிழில் மட்டும் பெரிய அளவு கவனம் செலுத்தி வசூலை வாரி குவித்து வருகிறார். தனுஷின் படங்களை விட தமிழில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படங்கள் அதிக வசூல் செய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது 22 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் தனுஷுக்கு வெறும் 18 தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இருந்தாலும் கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் எனவும் செய்திகள் கிடைத்துள்ளன.
