சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நயன்தாரா வேண்டாம், இவரே போதும்.. கமலின் விக்ரம் பட நாயகி ரெடி

கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். ஆனால் படம் நகர்ந்த பாடில்லை.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்க படாமல் இருப்பது வேதனைதான்.

மிக விரைவில் வேலையை முடிக்கும் இயக்குனர்களின் படங்கள் இப்படி தள்ளிக் கொண்டே போவது சரியில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். இது ஒருபுறமிருக்க விக்ரம் படத்தில் யார் ஹீரோயின்? என்ற கேள்வி எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

முதலில் இதுவரை கமல்ஹாசனுடன் ஜோடி போடாத நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என பேசிய நிலையில் தற்போது நயன்தாரா அந்த விஷயத்தில் கொஞ்சம் ஈடுபாடு காட்டாததால் பின்வாங்கியது படக்குழு.

மேலும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடி இல்லை எனவும், உடன் நடிக்கும் நடிகை போலீஸ் அதிகாரியாக தான் நடிக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறுகின்றனர். இதன் காரணமாக தற்போது தன்னுடைய அப்பாவின் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிகிறது. விரைவில் லோகேஷ் அது பற்றி ஸ்ருதி ஹாசனிடம் பேச உள்ளதாகவும் கூறுகின்றனர்.

shruthi-hassan-cinemapettai
shruthi-hassan-cinemapettai

Trending News