பல்வேறு பஞ்சாயத்துகளுக்கு பிறகு வெங்கட் பிரபு மற்றும் சிம்பு இணையும் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி தற்போது முடிவடைந்து விட்டது. இதற்கான ரிலீஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
முன்னதாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட சிம்பு சில நாட்கள் கழித்து அந்த படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தார். வெங்கட் பிரபுவும் மாநாடு படம் கைவிடப்பட்டது என்பது போலவே கூறியிருந்தார்.
இந்நிலையில் திடீரென சிம்புவுக்கு எங்கிருந்து ஞானோதயம் வந்ததோ தெரியவில்லை. மாநாடு படத்தை தொடங்கி விடலாம் எனக்கூறி படப்பிடிப்பை தொடங்கினர். படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டபோது சிம்பு பயங்கர குண்டாக இருந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
அதன்பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கஷ்டப்பட்டு தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்து மீண்டும் மன்மதன், வல்லவன் படங்களில் இருந்தது போன்று ஸ்லிம் ஆக மாறினார்.
இதன் காரணமாக ஏற்கனவே படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் மீண்டும் எடுக்கப்பட்ட தயாரிப்பாளருக்கு கொஞ்சம் செலவை சேர்த்துவிட்டது. இருந்தாலும் தற்போது எப்படியோ ஒரு வழியாக மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டனர். மாநாடு படம் ரிலீசுக்கு ரெடியாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இருந்தாலும் வெங்கட்பிரபு மாநாடு படத்தின் ரிலீஸ் வரை வெயிட் செய்யாமல் விரைவில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம். மிக வேகமாக படமாக்கப்படும் இந்த படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மாநாடு படப்பிடிப்பின்போதே சிம்பு மற்றும் வெங்கட்பிரபு மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது என்பது போன்று கூறினர். ஒருவேளை அதுவாக இருக்குமோ எனவும் சந்தேகிக்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.