சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கிரிக்கெட் விளையாட்டில் சாதித்த தந்தைகள்.. பெயரை காப்பாற்றிக் கொள்ளத் தவறிய வாரிசுகள்!

சினிமா துறையில் அனைத்து பெரிய ஹீரோக்களின் வாரிசுகளும் அவர்களைப்போலவே பெரிய ஹீரோக்கள் ஆனது கிடையாது. அதேபோல் ஒரு சிலர் தன் தந்தையின் பெயரை காப்பாற்றி தனக்கென்று ஒரு நிலையான இடத்தை பிடித்து கொண்டுள்ளனர்.

இது அப்படியே கிரிக்கெட் விளையாட்டிற்கும் பொருந்தும். கிரிக்கெட்டில் தலை சிறந்த வீரர்களின் மகன்கள் ஒரு சிலர் மட்டுமே பெயர் சொல்லும் அளவுக்கு சாதித்துக் காட்டியுள்ளனர். ஆனால் மறுபக்கம் ஒரு சிலர் சரியாக விளையாடாமல் பாதியிலேயே காணாமல் சென்றுள்ளனர். அப்படி சரியாக விளையாடாத வீரர்களைப் பற்றி இதில் பார்க்கலாம்.

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் – மலி ரிச்சர்ட்ஸ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒரு காலத்தில் உலக கோப்பையை இரண்டு முறை வெல்ல காரணமாக இருந்தவர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ். இவர் ஒரு அதிரடி ஆட்டக்காரர். எதிரணி வீரர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இவர் விக்கெட்டை எடுப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

ரிச்சர்ட்ஸின் மகன் மலி ரிச்சர்ட்ஸ் உள்ளூர் போட்டிகளிலும், கவுண்டி கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடிய போதிலும் இவரால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, இவரது தந்தை போல் கடைசி வரை விளையாட முடியாமல் போனது.

Richars-and-Mili-Richards-Cinemapettai.jpg
Richars-and-Mili-Richards-Cinemapettai.jpg

கென் ரூதர்ஃபோர்டு – ஹமிஷ் ரூதர்ஃபோர்டு: கென் ரூதர்ஃபோர்டு நியூசிலாந்து அணிக்காக ஆறாயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஒரு காலத்தில் நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்றால் அது இவர்தான். நியூசிலாந்து அணியை வெற்றிகரமாக வழிநடத்திய கேப்டன்களில் இவரும் ஒருவர்.

இவருடைய மகன் ஹமிஷ் தனது 24 வயதில் நியூசிலாந்து அணிக்காக விளையாடத் தொடங்கினார்.தொடக்கத்தில் மிகச் சிறப்பாக விளையாடினாலும் தனது திறமையை அடுத்தடுத்த போட்டிகளில் நிரூபிக்கத் தவறினார். இதன் காரணமாக இவர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

சுனில் கவாஸ்கர் – ரோகன் கவாஸ்கர்: கிரிக்கெட் விளையாட்டில் லிட்டில் மாஸ்டர் என்று பெயரெடுத்தவர் சுனில் கவாஸ்கர். இந்திய அணிக்காக 13 ஆயிரம் ரன்களுக்கு மேல் டெஸ்ட் போட்டிகளில் குவித்துள்ளார். இவரைப் பார்த்து டெஸ்ட் போட்டிகளில் தானும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று வந்த பல வீரர்களும் உண்டு.

கவாஸ்கரின் மகன் ரோகன் கவாஸ்கர் இந்திய அணிக்காக 11 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமலும், தந்தையின் பெயரையும் காப்பாற்றிக்கொள்ள முடியாமலும் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஒதுங்கினார்.

Gavaskar-Rohan-Cinemapettai.jpg
Gavaskar-Rohan-Cinemapettai.jpg

ரோஜர் பின்னி – ஸ்டூவர்ட் பின்னி: ரோஜர் பின்னி ஒரு தலை சிறந்த ஆல்ரவுண்டர் 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார்.

ஸ்டூவர்ட் பின்னி 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். 2015ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தும் இவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

Roger-Stuart-Cinemapettai.jpg
Roger-Stuart-Cinemapettai.jpg

சர் லென் ஹட்டன் – ரிச்சர்ட் ஹட்டன் : லென் ஹட்டன், கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் விளையாடிய வீரர். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பெரும் பங்கு வகித்தவர். 2050ஆம் ஆண்டு டான் பிராட்மன் சாதனையை முறியடித்தவர்.

இவரது மகன் ரிச்சர்ட் கவுண்டி கிரிக்கெட் தொடரில் மிக சிறப்பாக விளையாடியவர். மொத்தமாக 270 போட்டிகளில் விளையாடி 625 விக்கட்டுகளையும் 7 ஆயிரம் ரன்களையும் இவர் குவிதுள்ளார். இருப்பினும் இவரால் இங்கிலாந்து அணிக்கு சர்வதேச அளவில் வெறும் 5 டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் விளையாட முடிந்தது.

Trending News