தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இவர்கள் இருவருக்குமே தமிழ் சினிமாவை தாண்டி உலக அளவில் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர்களது படங்கள் வெளியாகும்போது ஒருவருக்கு ஒருவர் எந்த ஒரு போட்டியும் பொறாமையும் இல்லாமல் நட்பு ரீதியாகவே தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
ஆனால் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் கருத்து மோதல்களும் சண்டையும் வருவது வழக்கம். அது அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரைக்கும் தொடர்ந்தது சண்டை போட்டுக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் எந்த விழா நிகழ்ச்சிகளிலும் தங்களது நட்பை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் இந்தியன். இப்படம் வெளிவந்த காலத்தில் இந்தியன் படத்தை பற்றி புகழாத பிரபலங்களை கிடையாது. அந்த அளவிற்கு இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கமல்ஹாசன்.

அதிலும் இந்தியனாக வயதான தோற்றத்தில் நடித்திருந்த கமலஹாசன் நடிப்பு உலக அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு சங்கரின் திரை வாழ்க்கை மாறியது என்று கூட கூறலாம். இப்படத்தின் பூஜை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பல வருடங்களாக வெளியாகமல் இருந்த புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது இந்தியன் படத்தின் 2 பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஷங்கருக்கும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஒரு சில மோதல்களால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 பாகத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாததால் தற்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.