சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பைரவி என்ற திரைப்படத்தின் கதை வசனம் எழுதி பிரபலமானவர் தான் கலைஞானம். பாக்யராஜ் இயக்கத்தில் பல படங்களுக்கு கதை வசனங்களை எழுதி உள்ளவர்.
இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 1990 காலகட்டத்தில் தன்னுடைய முழு முயற்சியினால் கமலஹாசனை வைத்து இயக்கலாம் என்று கதையை கூறியுள்ளார் கலைஞானம்.
கதையை கேட்டு விட்டு கமலஹாசன் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை, ஆனால் 2 வருடங்கள் கழித்து வெளிவந்த தேவர் மகன் படம் இவர் கூறிய அதே கதையாக இருந்ததாகவும், கதையை திருடி விட்டதாகவும் கமலஹாசனுக்கு தொலைபேசி தொடர்பு கொண்டுள்ளார்.
உண்மையை ஒத்துக்கொண்ட கமலஹாசன் மறுநாள் தனது அலுவலகத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அலுவலத்திற்கு சென்ற கலைஞானத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் காசோலை கொடுத்துள்ளார்.
ஆனால் கிட்டத்தட்ட 40 லட்சம் வரை நஷ்டயீடு போல் கேட்ட உள்ள கேட்டுள்ளார் கலைஞானம். ஆகையால் இந்த 25 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.

இப்படி 90-களில் அவர் கூறிய அதிவீர பாண்டியன் என்ற கதையைத்தான் தேவர் மகனாக பெயர் மாற்றி கமலஹாசன் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளார். தற்போது வரை அதிவீரபாண்டியன் கதைக்கான பணத்தை கமலஹாசன் இடமிருந்து வாங்க முடியவில்லையாம்.
இதனால் தான் தற்போது வரை தேவா்மகன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வில்லை என்பதும் கூறப்பட்டு வருகிறது.