விஜய் நிராகரித்த வெங்கட்பிரபு கதை.. ஏமாந்து சின்னாபின்னமான பிரபல நடிகர்

வெங்கட் பிரபு அஜித் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மங்காத்தா படத்திற்கு பிறகு விஜய் மற்றும் வெங்கட்பிரபு கூட்டணி உருவாக இருந்தது. இதற்காக விஜயும் வெங்கட் பிரபுவிடம் தனக்கென ஒரு கதையை உருவாக்கும்படி கேட்டுள்ளார்.

விஜய் அஜீத்தின் மங்காத்தா படப்பிடிப்பு தளத்திற்கு சென்று, அவர் செய்த பிரியாணியை சாப்பிட்டு அவருக்கு வாட்ச் வாங்கி கொடுத்த புகைப்படங்கள் எல்லாம் இன்றும் இணையதளங்களை ஆட்சி செய்து வருகிறது. அஜித் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படங்கள் அதுதான்.

அதன் பிறகு விஜய் மற்றும் அஜீத்தை வைத்து படம் எடுக்க நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறார் வெங்கட்பிரபு. அதற்கு முன்னதாக விஜய்யை வைத்து தனியாக படம் எடுத்துவிடலாம் என பிரியாணி படத்தின் கதையை விஜய்யிடம் கூறியுள்ளார்.

ஆனால் அந்த கதை விஜய்யை கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அஜீத்துக்கு மங்காத்தா போன்ற செம கதை உள்ள படத்தை செய்துவிட்டு தனக்கு இவ்வளவு சுமாரான படத்தை செய்துள்ளார் என்ற ஆதங்கமும் இருந்ததாம்.

கதையில் ஈர்ப்பு இல்லாத விஜய் ஏதேதோ காரணங்கள் சொல்லி வெங்கட்பிரபுவை கழட்டி விட்டார். அதன் பிறகு அதே கதையை கார்த்திக்கை வைத்து எடுத்தார் வெங்கட் பிரபு. கார்த்திக்கின் சினிமா கேரியரில் அதற்கு முன் எவ்வளவு பெரிய தோல்வி படத்தை அவர் பார்த்திருக்க மாட்டார்.

briyani-movie
briyani-movie

மோசமான தோல்வியை சந்தித்த பிரியாணி படத்தின் கதையில் நல்லவேளை விஜய் நடிக்கவில்லை என தளபதி ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர். இருந்தாலும் வருங்காலத்தில் விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படத்தை எடுத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகிறார் வெங்கட் பிரபு.