சிவகார்த்திகேயன், இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். கஷ்டப்பட்டால் யாரும் முன்னேறலாம் என்பதை கண்கூடாக காட்டியவர். இதற்கு முன் பல பேர் சினிமாவில் கஷ்டப்பட்டு உயர்ந்தேன் என்று சொல்லிருக்கலாம்.
ஆனால் சிவகார்த்திகேயனின் சினிமா வளர்ச்சியை தமிழக மக்கள் நேரடியாக பார்த்துள்ளனர். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு வருவதே பெரிய விஷயம். அதிலும் வெற்றி படங்கள் கொடுத்து அந்த இடத்தை தக்க வைப்பது என்பது கனவிலும் யோசிக்க முடியாத ஒன்று.
அதை நிஜத்தில் செய்து காட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். இன்று பலபேர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியையும் சரி, ஒரே மாதிரியாக படங்கள் செய்கிறார் எனக் கிண்டல் செய்தாலும் சரி. நாளுக்கு நாள் அவருடைய வளர்ச்சி உச்சத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.
கமர்சியல் படங்கள் பண்ணுவதில் உறுதியாக இருந்தாலும் எந்த மாதிரியான கமர்ஷியல் படங்கள் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார். அதோடு தான் வளர்ந்துவிட்டோம் என்பதோடு நிறுத்திவிடாமல் தன்னுடன் இருப்பவர்களையும் வளர்த்துவிட்டு அழகு பார்க்கிறார் சிவகார்த்திகேயன்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் டாக்டர். விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதுகுறித்து அப்டேட்கள் வருமா என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்குள் அடுத்தடுத்தப் படங்களை கமிட் செய்ய ஆரம்பித்து விட்டார் சிவகார்த்திகேயன்.
அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக சிவகார்த்திகேயன் முதன் முறையாக ஒரு படம் செய்ய உள்ளார். சமீபத்தில் 4 கோடி பட்ஜெட்டில் உருவாகி 60 கோடி வசூலை அள்ளிய ஜாதி ரத்னாலு என்ற படத்தை இயக்கிய அனுதீப் என்பவர் அந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்த படத்திற்காக முதல் முறையாக 25 கோடி சம்பளம் பேசி உள்ளாராம் சிவகார்த்திகேயன். முன்னதாக தமிழில் 22 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய், ரஜினி, அஜித், சூர்யா ஆகியோருக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
