பொதுவாக விளையாட்டு வீரர்கள் என்றால் உடம்பை பேணுவதில் முக்கியத்துவம் அளிப்பார்கள். அவர்களுக்கென்று தனியான உணவு பழக்கவழக்கங்களும் தேவையான அளவு உடற்பயிற்சிகளும் அளிக்கப்படும். அதிக எடை கொண்ட வீரர்களால் முழுமையான பங்களிப்பை கொடுப்பது கொஞ்சம் கடினமாக ஒன்றாகும். அப்படி 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட கிரிக்கெட் வீரர்களின் பயணத்தை இதில் பார்க்கலாம்.
ஜெஸி ரைடர்: நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் இவர். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் ரைடர் கிட்டத்தட்ட 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட வீரர். அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் சிறப்பான பங்களிப்பை நியூசிலாந்து அணிக்காக அளித்து வந்தார்.
அர்ஜுன ரணதுங்கா: இலங்கை அணியின் ஒரு வெற்றிகரமான கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா. பெரிய தொப்பையுடன் தான் இவரை மைதானத்தில் பார்க்கலாம். இவர் தலைமையில் தான் 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையை வென்றது.
ரஹீம் கான்வால்: 7 அடி 140 கிலோ எடை கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் தான் கான்வால். இவர் இந்திய அணியுடன் தான் 2019ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
ரமேஷ் பவர்: தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் ரமேஷ் பவார். இந்திய அணிக்காக 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவரும் கிட்டத்தட்ட 100 கிலோ எடையுடைய சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.
இன்சமாம் உல்-ஹக்: பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இவர் அதிக எடை கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர். ஓடுவதற்கே சிரமப்படும் இவர் எளிதாக ரன்அவுட் மூலம் விக்கெட்டை பறிகொடுப்பார். பாகிஸ்தான் அணியில் அதிக எடையினால் பெரிதும் சர்ச்சைக்குள்ளானார்.
டேவிட் பூண்: ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இவர். பார்ப்பதற்கு பெரிய மீசையுடன் 110 கிலோவுடன் ராட்சசன் போல் இருப்பார். அதற்கு தகுந்தார்போல் விளையாடவும் செய்வார். டேவிட் பூண் ஒருமுறை தொடர்ந்து 52 பாட்டில் பீர் குடித்ததாக சொல்கிறார்கள் இவருடன் விளையாடுபவர்கள்.