தமிழ் சினிமா துறையில் பன்முக நடிப்பு திறன் கொண்டவர் நடிகர் பசுபதி. தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ளார். அனைத்து கதாபாத்திரத்தையும் தத்ரூபமாக நடிப்பவர். இவர் கதாபாத்திரத்தில் முக்கியத்துவம் கொடுத்து வெற்றி கண்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
கன்னத்தில் முத்தமிட்டால்: இயக்குனர் ‘மணிரத்னம்’ இயக்கி 2002ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் பசுபதி ஒரு ஈழத் தமிழனாக தனது நடிப்பில் அனைவரையும் எடுத்திருப்பார். இத்திரைப்படத்தில் நந்திதா தாஸுக்கு அண்ணனாக நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தாலும் மக்களின் பார்வையில் விழும் அளவிற்கு நடித்திருப்பார்.
ஈ: எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருப்பார்.bio-chemical ஆயுதம் மூலம் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் மருத்துவ படித்த இளைஞராக ‘நெல்லை மணி ‘என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார் பசுபதி.
மஜா : மணிவண்ணனுக்கு வளர்ப்பு மகனாக விக்ரமுக்கு அண்ணனாகவும் நடித்திருப்பார். திருமணமான பெண் என்று தெரியாமல் விஜயகுமாரின் மகளாக இருப்பவரை காதலித்து எவ்வாறு திருமணம் செய்கிறான் என்பது கதைசுருக்கம். இத்திரைப்படத்தில் வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் ஒன்றி இருப்பார்.
தூள்: இத்திரைப்படத்தில் சொர்ணாக்கா வின் சகோதரராக ஆதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். ரவுடி என்றால் இப்படித்தான் இருப்பார்களோ என்று ரசிகர்கள் வியந்து பாராட்டும் அளவிற்கு பசுபதியின் நடிப்பு இத்திரைப்படத்தில் அமைந்திருக்கும்.
அருள்: தூள் படத்தை தொடர்ந்து அருள் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து இருப்பார். இதில் வில்லனாக மிரட்டியிருப்பார், இத்திரைப்படத்தில் அரசியல்வாதியாக கனகச்சிதமாக நடித்திருப்பார் பசுபதி.
விருமாண்டி: கமலஹாசன் எழுதி இயக்கிய திரைப்படம், இதில் கமலுடன் இணைந்து நடித்திருப்பார். பசுபதி கொத்தாளத் தேவன் என்ற முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். அவருடைய அந்த நடிப்பை நம் யாராலும் மறக்க முடியாது. இத்திரைப்படம் இரண்டு பாதைகளைக் கொண்ட விருவிருப்பான திரைப்படமாகும்.
திருப்பாச்சி: பட்டாசு பாலு “இந்த பாலு பேசமாட்டான் பட்டாசு தான் பேசும்” இந்த வசனத்தை உச்சரிக்காத உதடுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு நடிகர் பசுபதி அவருடைய நடிப்பில் மிரட்டியிருப்பார்.
வெயில்: வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் வெயில் இது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருப்பார். அவருடைய தோற்றமும் நடிப்பும் புதுவிதமாக இடத்தில் பிரதிபலித்தது.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா: 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் பட்டிமன்ற ராஜா, விஜய் சேதுபதியிடம் பஞ்சாயத்து பேசுபவராக காட்சியில் அண்ணாச்சி ஆக நடித்திருப்பார். நடித்தது சிறிது நேரம் என்றாலும் மக்களின் மனதில் தங்கி இருப்பார்.
அசுரன் : 2009ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற திரைப்படம் அசுரன் ஆகும் திரைப்படத்தின் மஞ்சுவாரியர் அண்ணனாகவும் சிறப்பாக தன்னை கதாபாத்திரத்தில் மாற்றி இருப்பார் பசுபதி.
சார்பட்டா பரம்பரை: தற்போது வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் சார்பட்டா பரம்பரை. இத்திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகன் என்று கூறும் அளவிற்கு முக்கியமான கதாபாத்திரத்தில் “ரங்கன் வாத்தியார்” என்ற கதாபாத்திரத்தில் பசுபதி சிறப்பாக நடித்திருக்கிறார் தன்னுடைய கண’மூலமாக ஒட்டுமொத்த காட்சியையும் ரசிகர்களுக்கு கடத்தி விடுகிறார் என்றால் அது மிகையாகாது.