திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

அஞ்சு வருஷம் ஒருத்தர் கூடவே சுத்துறது ஒரு வாழ்க்கையா.? வெளிப்படையாக உண்மையை கூறிய வாணி போஜன்

தொலைக்காட்சியில் அறிமுகமானவர்கள் பலர் வெள்ளித்திரையில் தங்களுடைய பயணத்தை தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றுள்ளனர். இந்த வகையில் நடிகை வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.

வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஆஹா தொடர் மூலமாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் தொடர் மூலமாக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இதை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார்.

முன்னணி நடிகரான விக்ரமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்று உள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சியான் 60 என்ற திரைப்படத்தில் வாணிபோஜன் இணைந்துள்ளார். விக்ரம் மற்றும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இணைந்திருக்கும் இத்திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பினை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

விக்ரம் அவர்களை பற்றி அனைவரும் கூறும் செய்திகளை பக்கத்திலிருந்து பார்ப்பது மிகவும் சுவாரசியமானது என்றும், மேலும் அவருடைய செயல்பாட்டை கண்டு நான் வியந்து உள்ளேன் துருவ் உடன் பணியாற்றுவது நன்றாக இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

vani-bhojan

மேலும் தொலைக்காட்சி வெள்ளி திரையை விட இன்னும் பெரியது நான் நடிகை என்னும் அங்கீகாரமே தொலைக்காட்சி மூலமாக தான் கிடைத்தது. எனினும் சினிமாவில் பல கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் ஆனால் தொடர்களில் ஹீரோக்களை சுற்றிய அதிக நேரம் செலவிடும் கதாநாயகியாகவே கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும் அவ்வாறு நடிக்க நான் விரும்பவில்லை ,பல கதாபாத்திரங்கள் நடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.

Trending News