செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

தளபதி படத்தில் இணைந்த முக்கிய டான்சர்.. பீஸ்ட் பட அதிரடி அப்டேட்.!

தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு இமயங்களாக இருக்கும் நடிகர்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவரது படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே எதிர்பார்ப்பு நிலவி வரும். அந்த வகையில் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் படங்கள் என்றால் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படமும், விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படமும் மட்டுமே.

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இவர், முன்னதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஒரு மாறுபட்ட கதை களத்தை கொண்டிருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படமும் நிச்சயம் நல்ல கதை களத்தை கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படம் குறித்த புதிய அப்டேட்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள நிலையில், படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், தற்போது நடன இயக்குனர் சதீஷ் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். பின்னணி டான்சராக இருந்து தற்போது நடன இயக்குனராக மாறியுள்ள சதீஷ் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். இவர் ஏற்கனவே தலைவா படத்தில் விஜய்யுடன் இணைந்து பாடல் காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில், இரண்டாவது முறையாக பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளார்.

beast-thalapathy-dancer
beast-thalapathy-dancer

அதுவும் டான்ஸராக அல்லாமல் விஜயுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சதீஷ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து ஒரு சிறந்த நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கலாம். நடன இயக்குனராக இருந்து பீஸ்ட் படம் மூலமாக சதீஷ் ஒரு நடிகராக அறிமுகமாகிறார் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News