மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் தான் விக்ரம். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தவிர நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விக்ரம் படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் சின்னத்திரை நடிகை சிவானி நாராயணன் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.
அதுவும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சிவானி நடிக்கிறார் என வெளியான தகவலால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதிக்கு ஷிவானியா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொருபுறம் இவர்களை வைத்து மீம் கிரியேட் செய்து இணையத்தில் கேலி செய்து வருகிறார்கள்.
சிவானியையே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு சீரியல் நடிகைகள் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் வேறு யாருமல்ல விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை மைனா நந்தினி மற்றும் பிரபல தொகுப்பாளினி மகேஸ்வரியும் தான்.
மைனா நந்தினி சின்னத்திரை மட்டுமல்லாமல் பல தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது காமெடியான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும். விக்ரம் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில், அடுத்தடுத்து சீரியல் நடிகைகள் களமிறங்கி வருவதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.