தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி, கமல் மட்டுமில்லாமல் மறைந்த சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர் போன்ற பிரபலங்களை தூக்கி விட்ட நிறுவனம் ஏவிஎம். தற்போது படங்களை தயாரிக்க விட்டாலும் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்தவர்கள் என்றே கூறலாம்.
அந்த காலகட்டத்தில் ஏவிஎம் சரவணனிடம் பாக்யராஜ் கதை சொல்ல சென்றுள்ளார். அப்போது கதை பிடித்துப்போக அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் ஏவிஎம் சரவணன் கடுப்பாகி விட்டாராம்.
அதாவது இந்த படத்திற்கு ‘சின்ன வீடு’ என்று பெயர் வைத்துள்ளார் பாக்யராஜ் டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்த மாதிரி பட தலைப்பு வைத்து என் கம்பெனியின் பெயரை கெடுக்க போறியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஏவிஎம் சரவணன். உடனே இந்த படத்திற்கு முந்தானை முடிச்சு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பாக்யராஜ் இயக்கி, நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தில் பாக்யராஜ் ஜோடியாக ஊர்வசி நடித்திருப்பார். முதல் மனைவி இறந்து போக இரண்டாம் தரமாக ஊர்வசி திருமணம் செய்து கொண்டு காமெடி கலந்த கதாபாத்திரத்தின் மிக அற்புதமாக ஊர்வசியும் நடித்து இருப்பார் என்றே கூறலாம்.
இந்த படம் கிட்டத்தட்ட 30 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 4 கோடி வரை வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. பாக்யராஜின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் பெரும் மைல்கல்லாக அமைந்தது. வசூல் சாதனை மட்டுமில்லாமல் பல விருதுகளையும் தட்டிச் சென்றது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் சின்னவீடு என்ற படமும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.