தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் சில பிரபலங்கள் பெயரும் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் அடிபட்டு வருகின்றது.
அந்த வகையில் சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, பவானி ரெட்டி, சூசன், டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, திருநங்கை மாடல் அழகி நமிதா மாரிமுத்து, இமான் அண்ணாச்சி ஆகியோர் பங்கேற்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இவர்களைத் தவிர விஜய் டிவியிலிருந்து குக் வித் கோமாளி கனி, ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, சுனிதா, பாபா பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வருகின்றது. இந்த லிஸ்டில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரும் அடிபட்டது. ஆனால், அவர் அந்த செய்தியை உண்மையில்லை என மறுத்துவிட்டார்.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமலஹாசன் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திரையில் தோன்றுவார். இதற்காக அவருக்கு ஒரு வாரத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாம். அப்படியென்றால் 100 நாட்கள் நிகழ்ச்சிக்கு, அவரது சம்பளம் 50 கோடியை தொடும் என்கிறார்கள்.
வெறும் 1 மணி நேரம் வந்து செல்வதற்கு 50 கோடியா என வாய் பிழைக்கிறார்கள் ரசிகர்கள். தமிழில் பிக்பாஸ் 5வது சீசனை எட்டியுள்ளநிலையில் ஹிந்தியில் 15வது சீசனை தொட்டுள்ளது. அங்கு 15வது சீசன் அடுத்தமாதம் தொடங்க உள்ளது. ஹிந்தி பிக்பாசை நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்க உள்ளார்.
இவர் ஏற்கனவே ஹிந்தியில் 9 மொத்தம் சீசனை தொகுத்து வழங்கியுள்ளார். இது இவர் தொகுத்து வழங்கவிருக்கும் 10வது சீசன் ஆகும். இந்த சீசனுக்கு அவர்க்கு சம்பளமாக 350கோடி வழங்கப்பட உள்ளதாம். இது சினிமாவில் அவர் ஒரு படத்திற்காக வாங்கும் சம்பளத்தைவிட அதிகம் என கூறப்படுகிறது.