ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

வாழ்நாள் தடை செய்யப்பட்ட ‘JARVO 69’.. மைதானத்திற்குள் நுழைந்த காரணத்தைக் கூறியும் விடாத காவல்துறை

டேனியல் ஜார்விஸ் இதுதான் இவர் பெயர். இவரை இந்த பெயரை வைத்து அழைத்தால் யாருக்கும் தெரியாது, ஆனால் “JARVO 69” என்று கூறினால் உலகத்திற்கே தெரியும். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டியில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைவதை வாடிக்கையாக வைத்துள்ளவர் “JARVO 69”

“JARVO 69” லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் 2 வது நாள், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். உடனே காவலர்கள் அவரை வெளியே விரட்டியடித்தனர். இவர் இதற்கு முன்னர் அடிக்கடி இதே தவறை செய்துள்ளார்.

Jarvo1-Cinemapettai.jpg
Jarvo1-Cinemapettai.jpg

“JARVO 69” இங்கிலாந்து அணி விளையாடிக்கொண்டிருக்கும் போது, 34வது ஓவரை உமேஷ் யாதவ் வீசுகையில் மைதானத்திற்குள் புகுந்தார். இவர் இந்திய அணி அணிவது போல் உள்ள ஜெர்சியில் “JARVO 69” என்ற பெயர் பின்னால் அச்சிடப்பட்ட டீசர்ட்டுடன் உள்ளே புகுந்தார். இதனால் போட்டி 5 நிமிடம் தடைபெற்று, காவலர்கள் அவரை வெளியே இழுத்துச் சென்ற பின்னர் தொடங்கியது.

இவர் இதற்கு முன்னர் ஒரு முறை பேட்டை தூக்கிக்கொண்டு பேட்டிங் செய்ய வந்ததும், மறுமுறை பீல்டிங் செய்ய வந்ததும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் இவருக்கு இங்கிலாந்திலுள்ள அனைத்து மைதானங்கலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

Jarvo2-Cinemapettai.jpg
Jarvo2-Cinemapettai.jpg

தற்போது இவர் மைதானத்திற்குள் நுழைந்த காரணத்தை கூறியுள்ளார். இவர் முதல்முறை நுழையும்போது ஜானி பேர்ஸ்டோ இவரை திட்டி உள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்ட ‘JARVO 69’ பேர்ஸ்டோ, பும்ராவால் டக் அவுட் செய்யப்பட்டதும், அவரை வாழ்த்துவதற்காக அத்துமீறி உள்ளே ஓடி வந்துள்ளார். இந்த காரணத்தை காவலர்களிடம் கூறியும் அவர்கள் ஏற்க மறுத்து தண்டனை கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார் ‘JARVO 69’.

Trending News