சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

4 பிரபலங்கள் வெளியிடும் மாநாடு டிரைலர்.. என்ன ஆனாலும் நயன் சென்டிமென்ட்டை விடாத சிம்பு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மேலும் இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

சமீபத்தில் மாநாடு படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்று முன்னர் இப்படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காலை 11.25 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளதால், படத்தின் டிரெய்லரை அந்தந்த மொழியில் உள்ள பிரபலங்கள் வெளியிட உள்ளார்களாம். அதன்படி தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தெலுங்கில் நடிகர் நானி, கன்னடத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டி, மற்றும் மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி ஆகியோர் மாநாடு படத்தின் டிரைலரை வெளியிட உள்ளனர்.

படத்தின் டிரைலர் வெளியாவது ஒருபுறம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு புறம் சிம்புவிற்கு சிக்கல் எழுந்துள்ளது. சிம்பு சும்மா இருந்தாலும் அவரை வச்சு செஞ்சுட்டு தான் இருக்காங்க. இந்ந முறையும் அப்படி ஒரு சிறப்பான சம்பவம் செஞ்சிருக்காங்க. அப்படி என்னனு தான கேட்கறீங்க?

அதாவது தற்போது மாநாடு படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காலை 11.25 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் 1+1+2+5=9 என அந்த நேரத்தை கூட்டி 9 வருவதால் நயன்தாராவிற்காகவே அந்த நேரத்தை தேர்வு செய்துள்ளதாக கிளப்பி வருகிறார்கள்.

maanaadu-tralier
maanaadu-tralier

சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா ஒரு சமயத்தில் காதலித்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சிம்பு என்ன செய்தாலும் அதை நயன்தாராவுடன் ஒப்பிட்டு பேசி வருவது சரியான செயல் அல்ல. மற்றவரின் சொந்த வாழ்க்கையை வைத்து இதுபோன்று பேசி வருவது தவறான செயல் என சிலர் கூறி வருகின்றனர்.

Trending News