ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்த 5 வீரர்கள்.. அதிக சிக்ஸர்கள், பவுண்டரிகளும் அடித்தது இவரா?

ஆரம்ப காலகட்டத்தில் 60 ஓவர்கள் நடத்தப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்சமாக ஒரு அணி 150, 200 ரன்கள் மட்டுமே எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது நடைமுறையிலுள்ள கிரிக்கெட் போட்டிகளில் 50 ஓவர், 20 ஓவர், 10 ஓவர் என ஆட்டத்தை குறைத்து விளையாடுவதால் பல அதிரடி வீரர்கள் உருவாகினார்கள். அப்படி அடித்து ஆடும் வீரர்களில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஓவரில் சிக்சர்கள் அதிக முறை அடித்த வீரர்களை இதில் பார்க்கலாம்,

டேவிட் வார்னர்: ஆடம் கில்கிறிஸ்ட், இவருக்கு நிகராக வந்தவர்தான் டேவிட் வார்னர். எந்த பந்துவீச்சாளர்கள் வந்தாலும் துணிந்து அடித்த ஆடக்கூடிய இவர் 7 முறை முதல் ஓவரிலேயே சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

Warner-Cinemapettai.jpg
Warner-Cinemapettai.jpg

சாகித் அப்ரிடி: இன்று வரை பாகிஸ்தான் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சாகித் அப்ரிடி. இவர் ஆட்டத்தை பார்ப்பதற்கே தனியாக ஆடிட்டோரியத்தில் கூட்டங்கள் சேரும். முதல்முறையாக 37 பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் அப்ரிடி. கிட்டதட்ட ஒன்பது முறை முதல் ஓவரில் சிக்ஸர் பறக்க விட்டுள்ளார்.

Sahid-Afridi-Cinemapettai.jpg
Sahid-Afridi-Cinemapettai.jpg

ஆடம் கில்கிறிஸ்ட்: விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் தலை சிறந்த ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட். இவர் ஆடிய காலத்தில் ஆஸ்திரேலிய அணியை அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இவரும் கிட்டத்தட்ட பத்து முறை முதல் ஓவரில் சிக்சர்களை பறக்க விட்டுள்ளார்.

Adam-Cinemapettai.jpg
Adam-Cinemapettai.jpg

சனத் ஜெயசூர்யா: ஒருநாள் போட்டிகளில் பவர் பிளேயில் அடித்து ஆடும் யுக்தியை கிரிக்கெட் உலகிற்கு கொண்டு வந்தவர் ஜெயசூர்யா. இவர் ஒருநாள் போட்டிகளில் 13 முறை முதல் ஓவரில் சிக்சர்கள் அடித்துள்ளார்.

Sanath-Cinemapettai.jpg
Sanath-Cinemapettai.jpg

விரேந்திர சேவாக்: சேவாக்கை பார்த்து, ஒரு மனிதன் இவ்வளவு தைரியமாக விளையாடுவதை நான் பார்த்ததில்லை என்று பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். அந்த அளவிற்கு பயப்படாமல் அடித்து ஆடக்கூடியவர் சேவாக். இவர் 15 முறை முதல் ஓவரில் சிக்சர்கள் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி பவுண்டரிகள் அதிக முறை அடித்த வீரரும் இவரே.

Shewag-Cinemapettai-1.jpg
Shewag-Cinemapettai-1.jpg

Trending News