வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

SJ சூர்யாவுக்கு அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 4 படங்கள்.. விஜய் சேதுபதி இடத்தைப் பிடித்து விடுவாரோ

நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் எஸ் ஜே சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கியுள்ளார்.

எஸ் ஜே சூர்யா நியூ, வியாபாரி, இசை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சிறிது இடைவெளிக்குப் பிறகு விஜயின் மெர்சல் படத்திலும், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்தார். இவருடைய வில்லத்தனமான சிரிப்பும், நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது எஸ் ஜே சூர்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் வந்தான்..சுட்டான்..போனா..ரிப்பீட்டு என்ற வசனம் டிரெண்ட் ஆகியுள்ளது.

ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் எஸ் ஜே சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதைத்தொடர்ந்து எஸ்ஜே சூர்யா வெங்கட் ராகவன் இயக்கத்தில் கடமை பேய் படத்தில் நடித்து வருகிறார். இதில் எஸ் ஜே சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். இவற்றைத் தவிர ஒரு வெப் சீரிஸிலிலும் நடித்து வருகிறார்.

எஸ் ஜே சூர்யா மாநாடு, டான் படங்களில் வில்லனாகவும், பொம்மை, கடமை செய் படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் நடித்த திரைப்படங்களும், வெப்சீரிஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகவுள்ளது. மாநாடு படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் போல மற்ற படங்களும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்றும் அவரது படங்கள் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Trending News