சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியில் இவரது துருதுருவென பேச்சும், சேட்டைகள் செய்யும் விதமும் ரசிகர்கள் பிடித்துப்போக அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். சன்மியூசிக் நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கிய போது ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர்.
சன் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் போது விஜய் டிவி அவருக்கு அழைப்பு விடுக்க தற்போது தனது தொகுப்பாளர் பணியை விஜய் டிவியில் சிறப்பாக செய்து வருகிறார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு உதவியாளராக சேட்டைகள் செய்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
அதன்பிறகு தனது யூட்யூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சகல விஷயங்களையும் வீடியோவாக வெளியிட்டு இணையதளம் வாயிலாகவும் பல லட்சத்தை சம்பாதித்து வருகிறார். சமீபத்தில்தான் இவர் தனது நீண்ட நாள் ஆசையான BMW காரை வாங்கினார். இதனை அவரே புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.
பின்பு தனது 2வது ஹூண்டாய் காரை வாங்கியதையும் ரசிகர்களுக்கு தெரிவித்தார். தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலைக்கு ஒரு எபிசோடுக்கு கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. வாரத்திற்கு 2 எபிசோடுகள் தொகுத்து வழங்குவதன் மூலம் 14,0000 ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தனது யூடியூப் சேனல் மூலமாகவும் மாதத்திற்கு 5 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெற்று வருகிறார். இதனை அறிந்த இணையதள ரசிகர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் ஆடி, பென்ஸ் போன்று பல கார்கள் வாங்குவார் என கூறி வருகின்றனர்.