செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

என் தலைவன் சிம்புவுக்கு தான் நயன்தாரா.. விக்னேஷ் சிவனுக்கு ஷாக் கொடுத்த இன்ஸ்டா பதிவு

தமிழ் சினிமாவில் அதிகமாக கிசுகிசு பேசப்பட்ட ஜோடிகள் என்றால் அது சிம்பு, நயன்தாரா. வல்லவன் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததின் மூலம் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இந்தப் படத்திலேயே சிம்பு, நயன்தாராவுக்கு நெருக்கமான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

பின்பு ஒரு சில காரணங்களால் சிம்பு, நயன்தாரா இருவரும் பிரிந்துவிட்டார்கள். இவர்களது பிரிவு சிம்பு ரசிகர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் மிகப் பெரிய ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் அப்டேட்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட சூட்டிங் மைசூரில் நடக்கவிருக்கிறது என பதிவிட்டிருந்தார்.அந்தப் பதிவின் கீழே சிம்புவின் ரசிகர் ஒருவர் நயன் என் தலைவன் சிம்புவுக்கு தான் என்று கமெண்ட் செய்திருந்தார். ஆனால் இதனை விக்னேஷ் சிவன்  கண்டுக்காத படி அமைதியாக இருந்துள்ளார்.

simbu nayanthara
simbu nayanthara

தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து படங்களில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதால், அவரின் மார்க்கெட் தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஆனால் சிம்பு படத்தின் அப்டேட்டுகள் அனைத்தும் வெளியாகும் நேரத்தை பார்ப்பவர்களோ அவர் இன்னும் ஏன் 9-ஐ விடவில்லை என்கிறார்கள்.

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட இருக்கை எண் 9-யில் சிம்பு அமர்ந்திருந்தார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்திலேயே பல இடங்களில் நயன்தாராவின் சாயல் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில் 9 இலக்குகளில் படத்தின் பெயர் வெந்து தணிந்தது காடு உள்ளதால் இதையும் நயன்தாராவுடன் ஒப்பிட்டு வருகிறார்கள். சிம்பு நயன் சென்டிமென்ட்டை விட்டாலும், தலைவன் இன்னும் நயனை மறக்கவில்லை என்று சிம்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Trending News