புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தலைகனம் இல்லாத ராகுல் டிராவிட்.. கங்குலியை வியக்க வைத்த அந்த செயல்!

இந்திய அணிக்கு தற்போது முதன்மை பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டிருப்பவர் ராகுல் டிராவிட். இதற்கு முன், இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டவர் ரவிசாஸ்திரி, அவருக்கு அடுத்தபடியாக, இந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய பிசிசிஐ, இறுதியில் ராகுல் டிராவிட்டை அணியின் பயிற்சியாளராக நியமித்தது.

டிராவிட்டை, பயிற்சியாளராக நியமிப்பதற்கு முன்பு பல கேள்விகள் எழுந்தன. டிராவிட், விராட் கோலியுடன் இணைந்து செயல்படுவாரா, ஏற்கனவே கேப்டன் கோலி மற்றும் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவிற்கும் நிறைய பிரச்சனைகள் எழுந்துள்ளது. அதனால் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி ஒப்பந்தம் ஒரு கேள்விக்குறியாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக டிராவிட்டும் தான் இந்திய U-19 அணிக்கு பயிற்சியாளராகவே இருக்க விரும்புகிறேன் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இதனை கங்குலி தலைமை ஏற்க மறுத்து, அவரை சமாதானம் செய்து சீனியர் அணிக்கு பயிற்சியாளராக நியமித்தது. மேலும் அவர் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியை விவிஎஸ் லக்ஷ்மனிடம் ஒப்படைத்தது.

Rahul-Cinemapettai.jpg
Rahul-Cinemapettai.jpg

இந்நிலையில், தற்போது ராகுல் டிராவிட்டின் ஒரு புகைப்படம் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது. அதில் டிராவிட் பயிற்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தானே சுமந்து வருகிறார், பயிற்சிக்குப் பின் அவரே எடுத்தும்  செல்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த சௌரவ் கங்குலி, தலைக்கனம் இல்லாத மனிதர் ராகுல் டிராவிட் எனவும் அவரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமித்தது சரியான முடிவு எனவும் கூறியுள்ளார்.

பயிற்சியாளர் டிராவிட்டை அனைத்து வீரர்களும் புரிந்துகொண்டு செயல்பட்டால் வருங்காலத்தில் இந்திய அணி தலை சிறந்த அணியாக உருவெடுக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறுகின்றனர்.

Trending News