ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மோதிக்கொண்ட விராட் கோலி மற்றும் கங்குலி.. அவமரியாதை செய்தார்

ஒரு காலத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியை மீட்டு உலக அளவில் தலை சிறந்த அணியாக மாற்றியவர் சௌரவ் கங்குலி. இந்திய அணி நிறைவான வீரர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது கங்குலியின் வரவு இந்திய அணிக்கு ஒரு பெரிய அஸ்திவாரத்தை கொடுத்தது.

கங்குலி தனது ஓய்வுக்கு பின் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் உள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், கங்குலிக்கும் இடையே நல்லதொரு கலந்துரையாடல் இல்லை என்று கூறுகின்றனர்.

விராத் கோலி ஒரு சிறந்த கேப்டன் அவரை சௌரவ் கங்குலி வேண்டுமென்றே விளக்கியுள்ளார். ஒரு கேப்டனுக்கு உண்டான மதிப்பை கங்குலி கொடுக்க மறுக்கிறார் என விராட் கோலி ரசிகர்கள் கங்குலி மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

sourav-kumble-Kholi-Cinemapettai.jpg
sourav-kumble-Kholi-Cinemapettai.jpg

இதனை எதிர்க்கும் விதமாக கங்குலி ரசிகர்கள், விராத் கோலி அணியில் இருந்து பல திறமையான வீரர்களை ஒதுக்கியுள்ளார். ஆனால் சௌரவ் கங்குலி இந்திய அணிக்காக பல வீரர்களை உருவாக்கிக் கொடுத்தவர். விராட்கோலி ஏற்கனவே அணில் கும்ப்ளே விஷயத்திலும் பிரச்சனை செய்தவர். அவர் சொல்வதை தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற குணம் கொண்டவர் என்று கூறி வருகின்றனர்.

இவர்களுடைய ரசிகர்கள் இவ்வாறு மோதிக்கொண்டு, நேற்று சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆனார்கள். ஆனால் உண்மை என்ன என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.

Trending News