வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி.. ராஜமவுலி காட்டில் பண மழைதான்

தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இவர் தற்போது ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை இயக்குனர் உட்பட அனைவரும் தற்போது ப்ரமோஷன் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த படத்திற்கான ப்ரமோஷன் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அப்போது மேடையில் பேசிய உதயநிதி, ராஜமௌலி காகத்தான் இந்த விழாவில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். மேலும் பத்து வருடங்களுக்கு முன்பு நான் ரெட் ஜெயின்ட் நிறுவனத்தை ஆரம்பித்தேன். அப்பொழுது ராஜமவுலி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த மகதீரா திரைப்படத்தை தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டோம்.

அந்தப்படம் தெலுங்கை போலவே தமிழிலும் மிகப்பெரிய வெற்றி அடைந்து 4 கோடி ரூபாய் வரை லாபத்தை கொடுத்தது என்று கூறினார். அதன்பிறகு தற்போது இந்த ஆர் ஆர் ஆர் படத்தை சென்னையில் 3 இடங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மாவீரன் திரைப்படத்தை வெளியிடும் பொழுது ராஜமௌலி தன்னிடம் சத்தியம் சினிமாவில் இந்த திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அதன் படியே படத்தை வெளியிட்டோம். தற்பொழுது இந்த ஆர் ஆர் ஆர் படமும் சத்யம் சினிமாவில் உள்ள ஆறு ஸ்கிரீனில் ஐந்து ஸ்கிரீனில் கண்டிப்பாக வெளியிடப்படும் என்று வாக்கு கொடுத்துள்ளார். உதயநிதியின் இந்த அறிவிப்பால் சந்தோஷத்தில் இருக்கிறார் ராஜமவுலி. அப்புறம் என்ன ராஜமவுலி காட்டில் பணம் மழைபோல் கொட்டும்.

இந்தப் படத்தில் அற்புதமாக டான்ஸ் ஆடிய ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணை பாராட்டிய உதயநிதி எனக்கு டான்ஸ் வரவே வராது. சிலருக்கு டான்ஸ் ஆடினால் தான் கால் வலிக்கும், ஆனால் எனக்கு உங்கள் டான்ஸை பார்த்தாலே சுளுக்கு வந்துவிடுகிறது என்று கலகலப்பாக பேசினார்.

மேலும் பாகுபலி படம் எந்த அளவுக்கு வெற்றியை பெற்றதோ அதைவிட அதிகமாக இந்த படம் வெற்றி பெறும் என்று படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களையும் உதயநிதி தெரிவித்தார்.

Trending News