புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூர்யாவின் வெற்றி இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு.. 100 கோடி பார்சல் பண்ணுங்கப்பு

நடிகர் சிம்பு பல பிரச்சனைகளை தாண்டி தற்போது தான் மாநாடு என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார். மேலும் இப்படம் மூலம் அவர் இழந்த மார்க்கெட் மீண்டும் அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்த முறை அவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பை அவர் தவறவிட விரும்பவில்லையாம். அதனால் முன்பு செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல ஒரு படம் வெற்றி பெற்றால் போதாது இனி அடுத்தடுத்து படங்களையும் வெற்றி படங்களாக வழங்க வேண்டும் என்பதால் கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறாராம். தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமாரு, பத்து தல உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக வெற்றி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற மாபெரும் வெற்றி படத்தை வழங்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

சுதா கொங்கரா கூட்டணி என்றால் கட்டாயமாக அது ஒரு வெற்றிப் பட கூட்டணி ஆகத்தான் இருக்கும். சிம்பு இப்பொழுது நல்ல கதைகளை செலக்ட் செய்கிறார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

ஏற்கனவே மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்னர் சிம்பு நடிப்பில் உருவாகும் புதிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருவதால் தற்போது சுதா இயக்கத்தில் நடிக்க சிம்பு முடிவு செய்து உள்ளாராம். அதன்படி ஏற்கனவே இரண்டு முறை இயக்குனர் சுதாவை அழைத்து கதை விவாதம் செய்த சிம்பு, சமீபத்தில் மூன்றாவது முறையாக சந்தித்து கதை குறித்து விவாதம் செய்துள்ளாராம்.

இதனால் அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அப்படி இப்படம் உறுதியானால் சுதா இயக்கத்தில் சூரரை போற்று படம் போல ஒரு மாபெரும் வெற்றி படமாக சிம்புவிற்கு இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ மனுஷன் விட்ட இடத்தை திரும்ப பிடிச்சா போதும்.

Trending News