திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மொத்த ஹீரோயினையும் தூக்கி சாப்பிட்ட சிம்பு ஜோடி.. வெந்து தணிந்தது காடு லேட்டஸ்ட் போஸ்டர்

நடிகர் சிம்பு சமீபத்தில் இறுதியாக வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் பிரபல இயக்குனர் கெளதம் மேனன் உடன் சிம்பு மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு.

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு பார்ப்பதற்கு 14 வயது சிறுவன் போல தோற்றம் அளிக்கிறார். உடல் எடையை குறைத்து படத்திற்காக கடினமாக உழைத்து வருகிறார். மேலும் சமீபத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டுள்ளார். அதன்படி வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கௌதம் மேனன் அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

vendhu thanindhathu kaadu
vendhu thanindhathu kaadu

மேலும் இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இட்னானி என்ற நடிகை நடிக்க உள்ளதாகவும், அவர் பாவை என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கெளதம் மேனன் கூறியிருப்பதோடு சிம்பு சித்தி இட்னானி ஆகிய இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

str-heroin
str-heroin

நடிகை சித்தி இட்னானி தற்போது இயக்குனர் சசி நடிகர் ஹரீஷ் கல்யாண் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் அவர் வெந்து தணிந்தது காடு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News