சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஏஆர் ரஹ்மான் இசையில் எஸ்பிபி-யின் குரல்.. திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் 10 பாடல்கள்

பெரும்பாலான இசையமைப்பாளர்கள் புதிய குரலைத் தொடர்ந்து தேடுவார்கள். ஆனால் ஏ ஆர் ரஹ்மான் இசையில் எஸ்பிபி தொடர்ந்து பல சிறந்த பாடல்கள் பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் தன்னுடைய மந்திர குரலால் வித்தியாசத்தை காட்டியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் மற்றும் எஸ்பிபி காம்போவில் உருவான சிறந்த பத்து பாடல்களைப் பார்க்கலாம்.

ரோஜா: தமிழ் சினிமாவில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரஹ்மான். இந்தப் படத்தில் இடம்பெற்ற காதல் ரோஜாவே என்ற பாடல் எஸ்பிபிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. எஸ்பிபி இந்தப் பாடலை அவ்வளவு ரம்மியமாக பாடியிருந்தார். இந்தப் பாடல் இன்றும் பலரது ஃபேவரட் பாடல்களாக உள்ளது.

டூயட்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வெளியான திரைப்பட டூயட். ஏ ஆர் ரஹ்மான் மற்றும் எஸ்பிபி இணைந்த சிறந்த படங்களில் ஒன்று டூயட். இப்படத்தில் எஸ்பிபி அஞ்சலி அஞ்சலி மற்றும் என் காதலே என்ற மெல்லிசைப் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் மெட்டுப்போடு மெட்டுப்போடு, குளிச்சா குத்தாலம் ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

உழவன்: கதிர் இயக்கத்தில் பிரபு, பானுப்ரியா நடிப்பில் வெளியான திரைப்படம் உழவன். இப்படத்தில் பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ என்ற பாடலை எஸ்பிபி பாடிய இருந்தார். கண்களில் என்ன ஈரமோ என்ற டூயட் பாடலை சித்ரா உடன் இணைந்து எஸ்பிபி பாடிய இருந்தார்.

இந்தியன்: ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமானின் இசையும் உறுதுணையாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்பாடலை எஸ்பிபி, சுசிலா இருவரும் இணைந்து பாடி இருந்தார்கள்.

முத்து: முத்து படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலான ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் இசையில் எஸ்பிபி பாடியிருந்தார். வைரமுத்து வரிகளில் அமைந்த இப்பாடல் ரஜினியின் மிகச் சிறந்த பாடல்களில் இந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது.

சிவாஜி: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் சிவாஜி. இப்படத்தில் இடம்பெற்ற பல்லே லக்கா பல்லே லக்கா என்ற பாடலை எஸ்பிபி பாடிய இருந்தார். அவருடைய அற்புதமான குரலில் வெளியான பாடல் அப்போது ட்ரெண்டாகி குழந்தைகளின் ஃபேவரிட் பாடலாக இருந்தது.

ஜோடி: பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் எஸ்பிபி நான்கு பாடல்கள் பாடியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற வெள்ளி மலரே, காதல் கடிதம் தீட்டவே இந்த இரண்டு மெலோடி பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டானது.

காதலர் தினம்: காதலர் தினம் படத்தில் எஸ்பிபி, சொர்ணலதா குரலில் உருவான பாடல் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான். ஏ ஆர் ரகுமான் இசையில் வாலியின் வரிகளில் எஸ் பி பி யின் குரல் இப்பாடலுக்கு வலு சேர்த்தது. இன்றும் ஆல் டைம் ஃபேவரிட் பாடலாக இந்தப் பாடல் உள்ளது.

கிழக்கு சீமையிலே: அண்ணன், தங்கை பாசத்தை உணர்த்தும் படமான கிழக்குச் சீமையிலே படத்தில் மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே மற்றும் தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில என்ற பாடல்களை எஸ்பிபி பாடியிருந்தார். கிராமத்தின் மண்வாசனையை தன் குரல் மூலம் அப்படியே கொண்டு வந்திருந்தார் எஸ்பிபி.

Trending News