சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ஓட்டுக்காக மக்களை ஏமாற்றிய நிரூப்.. வெட்ட வெளிச்சமான உண்மை முகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இறுதி வாரமான இந்த வாரம் ராஜு, அமீர், பிரியங்கா, நிரூப், பவானி ரெட்டி ஆகிய போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இதனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டிக்காக போட்டியாளர்கள் அனைவரும் படு மும்முரமாக தயாராகி வருகிறார்கள். மேலும் தங்களுக்குக் கொடுக்கப்படும் டாஸ்க்குகளிலும் போட்டியாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

அதில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிரூப் தன்னுடைய நீளமான முடியை வெட்டி மிகவும் ஹாண்ட்சமாக இருப்பது போன்ற ஒரு போட்டோ தற்போது சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் போட்டியாளர்களுக்கு மேக்கப் குறித்த சில வசதிகள் செய்து தரப்படும். இந்த புகைப்படத்தை விஜய் டிவி நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.

niroop
niroop

அதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தது போன்ற ஹேர்கட், பேசியல் போன்றவற்றை செய்து கொள்வார்கள். இந்த வசதியை பயன்படுத்தி தான் நிரூப் தன்னுடைய லுக்கை இவ்வாறு மாற்றியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனலுக்காக தான் அவர் இவ்வாறு தன்னுடைய கெட்டப்பை மாற்றி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு முறை நிரூப், சிபியிடம் நான் இவ்வளவு நீளமான முடியை வளர்ப்பது கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானம் செய்வதற்கு தான். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் நான் எனது முடியை வெட்டி அவர்களுக்கு கொடுத்து விடுவேன் என்று சொன்னார்.

மேலும் ஒரு முறை டாஸ்க்கின் போது அபிநய், நிரூப்பின் ஒரு முடியை வெட்டியதற்கு அவ்வளவு கோபப்பட்டு பேசினார். இந்த முடி எனக்கு ரொம்ப முக்கியம் என்று பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்படி இருந்தவர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கேன்சர் நோயாளிகளுக்கு தானம் செய்வேன் என்று கூறிய முடியை வெட்டியுள்ளார்.

audiance-response-comment
audiance-response-comment

இதன் மூலம் இவரின் உண்மையான முகம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கேன்சர் நோயாளிகளுக்கு கொடுப்பேன் என்று கூறியது கூட மக்களிடம் நன்மதிப்பை பெற்று ஓட்டு வாங்குவதற்காக தானா என்ற சந்தேகம் இப்போது அனைவருக்கும் எழுந்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் பலரையும் கடுமையாக விமர்சிக்க வைத்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News