என்னதான் உடம்புல எண்ணெய தடவிட்டு மண்ணுல உருண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்ல. இப்போ நம்ம சிம்புவோட நிலமையும் அப்படி தாங்க இருக்கு. பாவம் மனுஷன் கடைசியா அவரோட நடிப்புல வெளியான மாநாடு படம் அதிரி புதிரி வெற்றி பெற்றது.
அதுமட்டும் இல்லைங்க இதுவரைக்கும் சிம்புவோட திரை வரலாற்றிலேயே முதல் முறையா மாநாடு படம் தான் 100 கோடிக்கு மேல வசூல் செஞ்சு பாக்ஸ் ஆபிஸ்ல இடம் பிடிச்சது. அதோட சிம்புவும் இந்த படத்துக்காக பயங்கரமா வெயிட்டெல்லாம் குறைச்சு பழைய சிம்புவா கம்பேக் குடுத்திருந்தாரு.
அவரோட நடிப்பும் வேற லெவல்ல இருந்ததா எல்லாருமே அவர பாராட்டினாங்க. உடனே மனுஷன் அவ்ளோ சந்தோசப்பட்டாரு. எப்படியும் பெஸ்ட் ஆக்டர் அவார்டு கிடைச்சிரும்னு கனவு கோட்டை எல்லாம் கட்டி வச்சிருந்தாரு. ஆனா அதெல்லாம் வெறும் கனவாவே போயிடுச்சு.
ஆமாங்க சமீபத்துல நார்வேல நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழால மாநாடு படத்துக்கு நான்கு பிரிவுகள்ல விருது வழங்கினாங்க. அதன்படி, சிறந்த இயக்குனராக வெங்கட் பிரபு, சிறந்த இசையமைப்பாளராக யுவன்சங்கர், சிறந்த வில்லன் நடிகராக எஸ்.ஜே.சூர்யா மற்றும் சிறந்த எடிட்டிங்கிற்காக ப்ரவீன் ஆகியோருக்கு விருது கொடுத்தாங்க.
அவ்வளவு ஏன்ங்க நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கூட கூடுதலாக கலைச்சிகரம் விருது குடுத்திருக்காங்க. ஆனா படத்துல ஹீரோவா நடிச்ச சிம்புவுக்கு ஒரு ஆறுதல் பரிசு கூட கிடைக்கலங்க. அதனால மனுஷன் ரொம்ப மன உளைச்சல்ல இருக்காராம். இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைக்காம போச்சேனு வருத்தப்பட்டுட்டு இருக்காராம்.