சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள்.. தோனியாகவே வாழ்ந்த சுஷாந்த்

தமிழ் சினிமாவில் விளையாட்டு சார்ந்த வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களின் கதைகளை அடிப்படையாக திரைப்படங்கள் எடுக்கப்படுகிறது. அந்தவகையில் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களை பார்க்கலாம்.

சென்னை 600 028 : வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 இல் வெளியான திரைப்படம் சென்னை 600 028. பதினொரு பேர் கொண்ட ஷார்க் அணி தான் கதையின் நாயகர்கள். கடைசியில் செமி ஃபைனலில் ராக்கர்ஸ் டீமை வீழ்த்தி ஷார்க் அணி செய்கிறது. இறுதிப்போட்டியில் ஷார்க் அணி குழந்தை கூட்டம் நிறைந்த பேட் பாய்ஸ் உடன் மோதுகிறார்கள். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து சென்னை 600028 பாகம்-2 எடுக்கப்பட்டது.

சென்னை 600 028 (2): சென்னை 600 028 முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக பிரிந்துவிட பத்து வருடங்களாக சிலர் மட்டும் நெருக்கமான நண்பர்களாக பழகி வருகிறார்கள். இதில், ஜெய், பிரேம்ஜிக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. ஜெய்யின் திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் கிரிக்கெட் விளையாடச் செல்லும் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சினையே சென்னை 600 028 2.

போட்டா போட்டி : யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் போட்டா போட்டி. இப்படத்தில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இரண்டு முறை மாமன்கள் தலைமையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் வென்ற அணி தலைவருக்கு பெண்ணைக் கட்டிக் கொடுப்பார்கள்.
கடைசியில் கிரிக்கெட் போட்டியில் யார் ஜெயிக்கிறார், ஹீரோயின் ஹரிணி யாரை திருமணம் செய்கிறார் என்பதை போட்டா போட்டி.

தோனி : இப்படத்தில் பிரகாஷ்ராஜ் தன் மகனை எம்பிஏ பட்டதாரி ஆக ஆக்க வேண்டும் என விரும்புகிறார். ஆனால் மகன் கார்த்திக்கு கிரிக்கெட் வீரர் தோனி போல் ஆக வேண்டும் என்பது ஆசை. ஒரு கட்டத்தில் கார்த்திக் கோமா ஸ்டேஜுக்கு செல்கிறார். பின்பு பிரகாஷ்ராஜ் தன் மகனின் ஆசையை புரிந்து கொள்கிறார். அதன் பிறகு கார்த்திக் குணமானதும் பள்ளி அளவில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கார்த்திக் கலந்துகொண்டு ஜெயிக்கிறார் என்பது தோனி.

எம் எஸ் தோனி : எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் எம்எஸ் தோனி. இப்படத்தில் கேப்டன் மகேந்திர சிங் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார். பீஹார் ராஞ்சியில் வசிக்கும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்த தோனி தன் திறமையால் கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறி, எப்படி இந்திய அணியில் இடம் பிடித்து உலகக் கோப்பை பெறுகிறார் என்பதே இப்படத்தின் கதை.

ஜீவா : இப்படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஷ்ணு. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு உள்ளார் விஷ்ணு. சிலரது சூழ்ச்சியால் விஷ்ணுவும், அவரது நண்பரும் இந்திய அணியில் செலக்ட் ஆகவில்லை. மனமுடைந்த அவரது நண்பன் தற்கொலை செய்து கொள்கிறார். பின்பு இந்திய அணிக்காக விஷ்ணு விளையாடி ஜெயித்தாரா என்பதே ஜீவா படத்தின் கதை.

கனா : கனா திரைப்படம் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. விவசாயத்தின் பின்னணியில் இருந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவின் ஆசைக்காக கிரிக்கெட் ஆட ஆரம்பிக்கிறார். பல போராட்டத்திற்குப் பிறகு இந்திய அணியில் கிரிக்கெட் வீரராக சேருகிறார். இறுதியில் ஐஸ்வர்யா கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றாரா என்பதே கனா.

Trending News