சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அப்பா போல முதல் படத்திலேயே வெற்றி கண்ட 4 வாரிசுகள்.. அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தந்தால் மட்டுமே ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியும். சில நடிகர்கள் தன் முதல் படத்திலேயே திறமையான நடிப்பின் மூலம் வெற்றி கண்டுள்ளார்கள். அவர்கள் வாரிசுகள் மிக சுலபமாக சினிமாத்துறையில் வந்திடலாம். ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே அந்த படம் வெற்றி பெறும். அவ்வாறு முதல் படத்திலேயே வெற்றி பெற்ற அப்பா, மகன் படங்களைப் பார்க்கலாம்.

சிவாஜி கணேசன்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆரம்பத்தில் நாடகத்தில் நடித்து வந்தார். அதன் மூலம் தமிழ் சினிமாவில் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றி கண்டார். இதைத்தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிரபு: சிவாஜி கணேசனின் வாரிசான பிரபு அவருடன் இணைந்து சங்கிலி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரசிகர்களால் இளைய திலகம் என்று அழைக்கப்படும் பிரபு டூயட், சின்னதம்பி, குரு சிஷ்யன் என பல படங்களில் வெற்றி கண்டுள்ளார்.

விக்ரம் பிரபு: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் விக்ரம் பிரபு. பிரபுவின் வாரிசு விக்ரம் பிரபுவின் முதல்படமான கும்கி படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பிரபு சாலமன் இயக்கத்தில் யானையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றி கண்டது. விக்ரம் பிரபு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

சிவக்குமார்: நடிகர், பேச்சாளர், ஓவியர், சின்னத்திரை நடிகர் என பல பரிமாணங்களை உடையவர் நடிகர் சிவகுமார். சிவக்குமார் 1970ல் ஏபி நாகராஜன் இயக்கத்தில் வெளியான திருமலை தென்குமரி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல விருதுகளும் கிடைத்தது.

சூர்யா: சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் விஜய், சூர்யா இருவருமே நேரெதிராக நடித்திருந்தார்கள். சூர்யா நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உள்ளார் சூர்யா.

கார்த்தி: சிவக்குமாரின் இளைய மகனான கார்த்தி, அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தில் நடித்திருந்தார். கிராமத்து சாயலில் உள்ள இப்படத்தில் கார்த்தியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. பருத்திவீரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, கைதி, சுல்தான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

Trending News