வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆர்ஆர்ஆர் பிரமோஷனில் வெச்சு செஞ்ச சிவகார்த்திகேயன்.. அந்தர் பல்டியாய் விழுந்த முடிச்சு

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படம் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கக்கூடிய படமாக இருக்கக்கூடிய படமான ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோரின் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் RRR. இந்த திரைப்படமும் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு மத்தியில் சமீபத்தில் நடந்த RRR திரைப்படத்தின் புரொமோஷன்காக நடிகர் சிவகார்த்திகேயன் அந்த விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு சென்று அந்தப் படத்தைப் பற்றியும் அந்த படத்தில் நடித்த நடிகர்கள் பற்றியும் மிகவும் புகழ்ந்து பேசி இருப்பார்.

அது மட்டுமின்றி ராஜமௌலி இயக்கத்தில் வந்த அத்தனை படங்களும் தனக்கு பிடிக்கும் என்றும் அதிலும் இந்த RRR திரைப்படத்தை நான் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆசைப்டுவதாகவும் கூறியிருந்தார். ஆனால் அதே நாளில் டான் திரைப்படமும், RRR திரைப்படமும் நேருக்கு நேர் இப்படி மோதிக்கொள்ளும் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை போல. அப்படி ஒரு சிறப்பான சம்பவம் தான் நிகழப்போகிறது.

ஒப்பிட முடியாத அளவிற்கு வேறு வேறு கதைக்களம் என்றாலும் வியாபார ரீதியில் பார்க்கும்போது மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ஒரு படம் டான். சிவகார்த்திகேயனின் டான் படம் வெளியாகும் அதே நாளில் வெளியாவது சிவகார்த்திகேயன் படத்திற்கு பின்னடைவாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் ரிலீஸ் டீஸர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் திரைப்படம் எந்த அளவிலும் பாதிக்காது என்று இணையதளத்தில் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் இரண்டு திரைப்படத்திலும் லைக்கா புரோடக்க்ஷனின் பங்கு இருப்பதால் அறிவிப்புகள் எப்படி வேண்டுமானாலும் மாறாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை இணையதளத்தில் ரசிகர்கள், “என்ன சிவா அண்ணா..? புரொமோஷனுக்கு சென்று RRR திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க போகிறேன் என்று சொன்னீர்களே தற்பொழுது உங்களின் படமும் அதே நாளில் வெளியாகிறது எப்படி உங்களால் பார்க்க முடியும்” என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Trending News