பெரும்பாலான படங்களில் சில முக்கிய இடங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே இருக்கும். உதாரணமாக பெரிய பெரிய அரண்மனைகள் மற்றும் வீடுகள் போன்றவை படத்திற்காக செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் படங்களில் பார்க்கும்போது அவை செட் என்றே தெரியாத அளவிற்கு தத்ரூபமாக இருக்கும்.
அவ்வாறு படங்களில் பார்க்க ஒரிஜினலாக காட்சியளிக்கும் சில இடங்களை தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். அதில் முதலில் உள்ளது சந்திரமுகி அரண்மனை. கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் தான் சந்திரமுகி. இதில் இடம்பெற்ற அந்த பிரம்மாண்ட அரண்மனை உண்மையான அரண்மனை கிடையாதாம்.
படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டப் தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அதேபோல் கடந்த 2008ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம்பெற்ற ஜெயம் ரவியின் வீடும் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதானாம்.
மேலும் கடந்த 1996ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் இடம்பெற்ற இந்தியன் தாத்தா வீடும் செட்டப் தானாம். அதேபோல் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் இடம்பெற்ற லைட் ஹவுஸும் ஒரிஜினல் கிடையாது. அதுவும் படத்திற்காக அமைக்கப்பட்ட செட்டப் தான்.
இதுதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் இடம்பெற்ற ஜெயில் மற்றும் விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற மெட்ரோ ரயில் சண்டை காட்சி போன்ற அனைத்துமே படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டப் தான்.
ஆனால் இவை அனைத்துமே படத்தில் பார்க்க செயற்கையாக அமைக்கப்பட்டிருப்பது போல தெரியாது. பார்க்க மிகவும் தத்ரூபமாக அப்படியே ரியலாக இருப்பது போலவே காட்சி அளிக்கும். தற்போது வரை யாராலும் இதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தத்ரூபமாக செட் அமைத்துள்ளார்கள். இந்நிலையில் தற்போது இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் இதெல்லாம் செட்டப்பா என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.