செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

30 கிலோ உடல் எடை குறைக்க கண்ணீர்விட்டு கதறிய சிம்பு.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்காரா.?

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதில் அவர் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு நடுவில் சில வருடங்கள் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இது சினிமாவில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் அவரின் உடல் எடை குறித்து பல விமர்சனங்களும் எழுந்தது.

அதன் பிறகு சில மாதங்கள் சிம்பு எந்த படங்களிலும் நடிக்காமல் உடல் எடையை குறைப்பதில் மும்முரமாக இருந்தார். அதன் பலனாக அவர் தன்னுடைய எடையை பாதிக்கு மேல் குறைத்து மிகவும் இளமையாக மாறினார். சிம்புவை இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமும், வியப்பும் ஏற்பட்டது.

மீண்டும் பழைய சிம்புவாக மாறிய அவருக்கு அனைவரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். ஆனால் அவர் இந்த உடல் எடையை மிகவும் சாதாரணமாக குறைத்துவிடவில்லை. இதற்காக அவர் பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

simbu
simbu

அதாவது பாஸ்கெட் பால், பேட்மிட்டன், டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் மூலமும், ஜிம்மில் பல மணி நேரம் வொர்க் அவுட்டும் செய்துள்ளார். இதுதவிர ரன்னிங், களரி, யோகா, பரதநாட்டியம், மசாஜ் போன்றவைகளையும் அவர் செய்துள்ளார்.

அதோடு சில ஆயுர்வேத உணவுப் பழக்கங்களும் அவர் மேற்கொண்டு கிட்டத்தட்ட தன்னுடைய உடல் எடையை 30 கிலோ வரை அவர் குறைத்துள்ளார். சிம்பு உடல் எடையை குறைப்பதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பது அனைவரையும் அதிக வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அவருடைய இந்த கஷ்டத்துக்கு பலனாகத்தான் மாநாடு திரைப்படம் 100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. மீண்டும் புத்துணர்வுடன் நடிக்க ஆரம்பித்துள்ள சிம்பு சினிமாவில் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Trending News