பிரம்மிப்பூட்டும் டாப் 5 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படங்கள்.. 90’லேயே மிரள விட்டிருக்காங்க

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தமிழ் சினிமா வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான படங்களை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் ரசிகர்களிடம் பெயர் போன ஐந்து படங்களை பற்றி பார்ப்போம்.

90களில் சீதா மற்றும் நிழல்கள் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘ஆடி வெள்ளி’ என்ற திரைப்படம் சிறந்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த கிராபிக்ஸ் படமாகும். இந்த படத்தில் வெள்ளிக்கிழமை ராமசாமி என பெயரிடப்பட்ட யானை ஒன்றும், பாம்பு ஒன்றும் நடித்திருக்கும்.

பக்தி திரைப்படமான ஆடி வெள்ளி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் இன்றுவரை ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைப்போல் ஆடிவெள்ளி படத்தை இயக்கிய அதே இயக்குனரான ராமநாராயணன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘குட்டி பிசாசு’ என்ற திரைப்படம் அவரது 121-வது படமாக அமைந்தது.

இதிலும் கிராபிக்ஸ்சுக்கு பஞ்சமில்லாமல் கார், ரோபோ போன்றவையெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்க்கும் அளவுக்கு திரைப்படத்தில் தாறுமாறாக பயன்படுத்தி இருப்பார்கள். இதில் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தனா தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்.

அதேபோன்று முதல் மற்றும் இரண்டு பாகங்களாக உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் அவரது எழுத்து இயக்கத்தில் வெளியான ‘விஸ்வரூபம்’ திரைப்படமும் இந்திய தொழில்நுட்பம் நுட்பங்களுக்கு சான்றாக விளங்கும் திரைப்படமாக படைக்கப்பட்டது. இதில் இடம் பெற்றிருக்கும் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவுக்கு இருக்கும்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘எந்திரன்’ திரைப்படமும் கிராபிக்ஸில் தூள் கிளப்பி இருக்கும்.முதல் மற்றும் இரண்டாம் பாகங்களாக வெளியான இந்தப் படத்தில் ரோபோ மூலம் ரஜினி மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோரை இரண்டு பாகங்களிலும் உயிரிய தொழில்நுட்பத்தினால் பிரமிப்பூட்டும் அளவுக்கு ஷங்கர் காட்சிப்படுத்தி இருப்பார்.

மேலும் ஏஆர் முருகதாஸ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு அறிவியல் புனைவு திரைப்படமாக சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களை மெய்மறந்து பார்க்கக்கூடிய திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கும்.