ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டிஆர்பி-யில் டாப் 5 இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்!

வெள்ளி திரையைப் போலவே சின்னத்திரைக்கு ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிலும் ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். எனவே இணையத்தில் வெளியாகியுள்ள கடந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து முதல் ஐந்து இடத்தை பிடித்து மாஸ் காட்டியுள்ளது.

ஏனென்றால் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து சன் டிவியின் கயல் சீரியல் பிடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் என்பதை காட்டி இருக்கிறது. இதைத்தொடர்ந்து சீரியலில் எதிர்பாராத திருப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சுந்தரி டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

அதைப்போல் ரொமான்டிக் சீரியலான ‘ரோஜா’ மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. நான்காம் இடத்தை அண்ணன் தங்கச்சி பாசப்பிணைப்பை அழகாக காட்டும் ‘வானத்தைப்போல’ சீரியலும்,  ஐந்தாம் இடத்தை ‘கண்ணாலே கண்ணை’ சீரியலும் பிடித்திருக்கிறது.

எனவே இந்த ஐந்து சன் டிவியில் சீரியல்கள் மற்ற எந்த சேனலிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களை உள்ளே விடாமல் டாப்-5 இடத்தை சன் டிவி ஆனது டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் தனக்கு சொந்தமாக்கி உள்ளது. பொதுவாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சினிமாவிற்கு நிகரான தரத்துடன் இருப்பதால் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெயர்போன சேனலாக மாறிவருகிறது.

இதைத்தொடர்ந்து விஜய் டிவி சீரியல்கள் ஆன பாக்கியலட்சுமி ஆறாவது இடத்தையும், பாரதிகண்ணம்மா 7-வது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 8-வது இடத்தையும், ராஜாராணி2  ஒன்பதாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

10-வது இடத்தை மீண்டும் சன் டிவியின் அன்பே வா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இந்த டாப் 10 டிஆர்பி ரேட்டிங்கில் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற சேனல்களை சேர்ந்த எந்த சீரியலும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News