மூன்றே படத்தில் மூட்டையை கட்டிய தமிழ் நடிகை.. ஓஹோ கமல் விளையாடிய விளையாட்டா

ஒரு நடிகை புதிதாக தமிழ் சினிமாவில், அறிமுகமான பிறகு யப்பா என்னாப்பொண்ணுடா இது..? என்று வாயை பிளந்து ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அப்படி பல நடிகைகளை பார்த்து வியந்து மனதில் பட்டாம் பூச்சிகளை பறக்க விட ஆரம்பித்து விடுவார்கள். அப்படி கிறுக்கு பிடிக்க வைத்த சில ஹீரோயின்கள் பிறகு எங்கடா ஆளையே காணோம்..? என்று கூறும் அளவிற்கு காணாமலும் போய் இருக்கின்றனர்.

அப்படி, கடந்த 2006 ஆம் ஆண்டு கமலின் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் அறிமுகமான நடிகைதான் கமலினி முகர்ஜி. குண்டு குண்டு கண்ணோடு, அழகிய தோற்றத்தில் ஹோம்லி லுக்கில் அந்த படத்தில் அறிமுகமான காட்சியில் கமல் அவரை பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்பது போல பார்த்தவுடன் பற்றி கொள்ளும் அளவிற்கு அழகாக இருந்தவர்தான் கமலினி.

அந்த படத்தில் வரும் பார்த்த முதல் நாளே பாடலை லூப் மோடில் பார்த்து ரசித்துக் கொண்டாடிய ரசிகர்கள் ஏராளம். சரி தமிழ் சினிமாவிற்கு சூப்பர் ஹீரோயின் கிடைத்து விட்டார், இவர் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கபட்டபோது அதன் பின் ஆளையே காணவில்லை. சரி மூட்டையை கட்டிக்கிட்டு ஊருக்கு கிளம்பிட்டாங்க போல என்று நினைத்த போது , மீண்டும் ஒரு ரீஎண்ட்ரி கொடுத்தார்.

வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு, வெகு காலம் கழித்து வெளியான காதல்னா சும்மா இல்லை, 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி போன்ற படங்களில் தோன்றினார். சரி முட்டக்கண்ணு முத்தழகு மீண்டும் வந்துவிட்டது என்று நினைத்தபோது , அந்தப் படங்களில் போதுமான வேலை இல்லாமல் உப்புக்கு சப்பானியாக நடிக்கும் வாய்ப்பாக ஆகி விட்டது. அதன் பின்பு அவரை எந்த சினிமாவிலும் சினிமா நிகழ்வுகளிலும் காண முடியவில்லை. ஹமாம் சோப் விளம்பரத்தில் வரும் அம்மா போல சில விளம்பரங்களில் நடித்து விட்டு மீண்டும் ஊருக்கே மூட்டையை கட்டி விட்டு கிளம்பி விட்டார்.

கௌதம் மேனனின் கண்களால் அவரை மற்ற இயக்குனர்கள் கமலினியை பார்க்கவில்லை போல. வேட்டையாடு விளையாடு படத்தில் கொஞ்ச நேரம்தான் வந்தாலும், பார்த்த முதல் நாளே பாடலை கேட்டாலே நம் அனைவருக்கும் இவரின் நியாபகம் தான் வரும். அப்படி, ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர் அதன் பின்பு தமிழ் சினிமாவில் தலை காட்ட முடியாமல் போய் விட்டது. கெளதம் மேனனின் ராசியா என்று தெரியவில்லை அவர் அறிமுகம் செய்யும் பல ஹீரோயின்களின் நிலை இப்போது இப்படிதான் இருக்கிறது.

இவரின் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சுமா மோகனை பார்த்து சொக்கி போன ரசிகர்கள் அவரின் அடுத்தடுத்த படங்களில் பார்த்த பிறகு இவரா அவர் என்று வெறுத்து போய் விட்டனர். இந்த வரிசையில் யாரும் கவனிக்காத பீல்டு அவுட் ஆன நடிகைகள் வரிசையில் கமலினியும் சேர்க்கப்பட்டார். தமிழில் மிகப்பெரிய நடிகையாக வலம் வர வேண்டிய அந்த கவர்ச்சிப் புறா சிறகொடிந்து மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி விட்டது. கமலினி மீண்டும் தமிழ் சினிமாவில் ஓரு என்ட்ரி கொடுத்தால் மஜாவாக இருக்கும் என்று 90’s கிட்ஸ்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.