திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து மிரண்டுபோன பிரபலம்.. பகையை மறந்து பாராட்டிய சம்பவம்

சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி திரைப்படம் அனைவரிடமும் நல்ல பாராட்டைப் பெற்று வருகிறது. விவசாயத்தை மையப்படுத்தி பல திரைப் படங்கள் வந்திருந்தாலும் இந்த திரைப்படம் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான சீமான் பார்த்துள்ளார். இது பலருக்கும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன் விஜய் சேதுபதிக்கும் சீமானுக்கும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அதாவது விஜய் சேதுபதி 800 என்ற படத்தில் நடிக்க இருந்தார்.

அந்தப்படம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படமாகும். அவர் ஒரு இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர். இதனால் இலங்கை தமிழர்களுக்காக போராடும் சீமானுக்கு விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிப்பது பிடிக்கவில்லை.

எனவே விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க கூடாது என்று அவருடைய கட்சிகள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது, அதைத் தொடர்ந்து அவருக்கு சில பகிரங்க மிரட்டல்களும் வந்தது. இதனால் விஜய் சேதுபதி அந்த திரைப்படத்தில் நடிக்காமல் விலகினார்.

அப்போதிலிருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் சீமான், விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி திரைப்படத்தை பார்த்து மனமார பாராட்டியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் விஜய் சேதுபதிதான்.

இந்த திரைப்படத்தை பார்க்குமாறு அவரே சீமானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சீமானும் அவர்களுக்குள் இருந்த பழைய கசப்பை எல்லாம் மறந்துவிட்டு அவரின் அழைப்பை ஏற்று அந்த படத்தை பார்த்து விஜய் சேதுபதியை மனமார பாராட்டியுள்ளார். எது எப்படியோ சண்டை சமாதானம் ஆனால் சரிதான் என்று திரையுலகில் பேசி வருகின்றனர்.

Trending News