ஐஸ்வர்யா ராய் மீது வெறி பிடித்த அதிபர்.. 10 கோடி கொடுத்து என்ன செய்ய சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் இருவர், ஜீன்ஸ் போன்ற படங்களின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். தற்போது மணிரத்னம் இயக்கி முடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இதன்பிறகு ஐஸ்வர்யா ராய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இன்னிலையில் ஐஸ்வர்யா ராய் கடந்த 2008ஆம் ஆண்டு முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவருக்காக பிரைவேட் பார்ட்டியில் ஆடி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

ஆசிப் அலி, ஐஸ்வர்யா ராயின் தீவிர வெறிபிடித்த ரசிகர் என்பதால் அவரை குஷிப்படுத்தும் விதத்தில் பெரிய பெரிய விஐபிகள் கலந்துகொண்ட பிரைவேட் பார்ட்டி பாகிஸ்தானில் உள்ள ராஷ்டிரபதி பவன் என்ற இடத்தில் நடந்து உள்ளது, அதில் ஐஸ்வர்யாராய் ஒரு நாள் முழுக்க நடனம் ஆடி அதிபரை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளாராம்.

இதற்காக ஐஸ்வர்யாராய் 10 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். என்னதான் பாகிஸ்தான் இந்தியா இடையே எல்லையில் பிரச்சனை நடந்து கொண்டிருந்தாலும் இதுபோன்ற பிரைவேட் பார்ட்டி நடத்தி ஒற்றுமையை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்களா என சமூக வலை தளங்களில் இந்த சம்பவத்தை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

அத்துடன் இந்தப் பார்ட்டி நடத்தப்பட்ட செய்தி மட்டுமே தற்போது கிடைத்திருக்கும் நிலையில், அதில் எடுக்கப்பட்ட எந்த புகைப் படமும் வெளிவராமல் ரகசியமாகவே இன்றுவரை வைக்கப்பட்டிருக்கிறது.

எனவே 14 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் ஆடிய ப்ரைவேட் டான்ஸ் தற்போது ரசிகர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது. இவ்வாறு சினிமா பிரபலங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஏதாவது ஒரு கட்டத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்புகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →