தொலைக்காட்சி

அஜித் படத்தை ஒரு முறை கூட ஒளிபரப்பாத பிரபல சேனல்.. நல்லவேளை ரிப்பீட் மோடில் போட்டு சாக அடிப்பாங்க!

By · 21 பிப் 2022 · Updated 13 அக் 2024
ajithkumar

அஜித்தின் படம் வெளிவருகிறது என்றால் திரையரங்குகளில் திருவிழா கோலமாக தான் இருக்கும், அந்த வகையில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்திய அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அஜித்தின் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை வாங்காத டிவி சேனல் பற்றிய செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

தற்போது அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து பல திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக உள்ளது. இவ்வாறு அஜித் படத்தை போட்டி போட்டுக் கொண்டு வாங்கும் திரையரங்குகள் உள்ள நிலையில் ஒருமுறைகூட அஜித்தின் படத்தை வாங்காத தொலைக்காட்சி ஒன்று உள்ளது.

அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் சன் டிவியில் பலமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது சன் டிவி டிஆர்பி இல் முதல் டேட்டிங்கில் உள்ள படம் விஸ்வாசம் தான். அதேபோல் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படமும் சன் டிவியில் பலமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகைகளின் போது அஜித் படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது என்றால் குடும்பத்துடன் பார்க்கும் ரசிகர்களும் உண்டு. அஜித் படத்தை வாங்க பல தொலைக்காட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும். ஆனால் சன் டிவிக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பும் விஜய் தொலைக்காட்சி அஜித்தின் படத்தை ஒரு முறை கூட வாங்கியது இல்லை.

விஜய் டிவி தன்னுடைய தனித்துவமான நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்கள் மூலம் மக்களின் மனதைக் கவர்ந்த விஜய் டிவி அஜித்தின் படத்தை ஒரு முறை கூட ஒளிபரப்பு செய்யாதது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு படத்தையே பலமுறை ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி அஜித்தின் படத்தை வாங்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இல்ல அஜித் படத்தை வாங்கும் அளவிற்கு விஜய் டிவியிடம் காசு பத்தவில்லையா.? என்பது போன்ற கமெண்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.