சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வளர்ச்சியில் யாருக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது என்ற பஞ்சாயத்து நீண்ட வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினிக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர் பாலச்சந்தர். ஆனால் பெயர் வாங்கி கொடுத்தது பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே பரட்டை கேரக்டர்.
இப்படி ரஜினியின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அவருடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள் பலர் இருக்கின்றனர். ரஜினி நடிகராக தமிழ் சினிமாவில் பாலசந்தரால் அறிமுகமாக்கப்பட்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் ரஜினியை மாஸ் நடிகராக மாற்றியதில் பஞ்சு அருணாசலம் என்பவருக்கு மிகப்பெரிய பெயர் உண்டு.
அன்றுவரை கதையின் வெற்றிக்காக தமிழ் சினிமா சுற்றிக்கொண்டிருக்க பாதையை மாஸ் படங்களும் ரசிகர்களை கவர முடியும் எனவும் அதன் மூலம் வசூலை அதிகப்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்து காட்டியவர் பஞ்சு அருணாச்சலம். ரஜினியை தமிழ் நாட்டிலுள்ள மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை இவரது படங்களுக்கு உண்டு.
ரஜினியின் ஆரம்ப காலகட்டங்களில் பாலச்சந்தர் தான் ரஜினியை சினிமாவில் உயர்த்தி விட்டார் என்ற பேச்சுக்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தபோது பஞ்சு அருணாச்சலம் என்னால் தான் அவர் இந்த சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருக்கிறார் என தைரியமாக சொல்கிறாராம். மேலும் ரஜினிக்கு இத்தகைய ரசிகர் பட்டாளம் உருவானதும் என்னுடைய படத்தின் மூலம்தான் என எப்போதுமே சொல்லிக் கொள்வாராம் பஞ்சு அருணாச்சலம்.
பஞ்சு அருணாச்சலம் பிரச்சினைக்கு மட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்கும் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் எழுத்தாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய பஞ்சு அருணாச்சலம் என்ன ரஜினியை வைத்து மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தார். இருந்தாலும் ரஜினிக்கு பஞ்சு அருணாச்சலம் விட பாலசந்தர் மீது ஒரு தனி மரியாதை உண்டு.
நடிகர்களுக்குள் நான் பெரியவனா நீ பெரியவனா என சண்டை போட்டது போக அந்த நடிகர்கள் வளர்ச்சிக்கு நான் காரணமா நீ காரணமா என சண்டை போட்டாலும் நாட்களும் உண்டு. இப்போது வரை அது வழக்கத்தில் இருக்கிறது என்பதுதான் வேடிக்கையானது.