கடந்த ஆண்டு இறுதியில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் மாநாடு. டைம் இலுப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் சிம்புக்கு ஒரு கம்பேக் கொடுத்தது.
ஆனால் மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு வேறு ஒரு நடிகரை மனதில் வைத்து கதை எழுதியுள்ளார். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான முதல் படமான சென்னை 600028 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்திலிருந்து வெங்கட்பிரபு உடன் பயணிப்பவர் ஜெய்.
அதன்பிறகு கோவா, சென்னை 600028- 2 படங்களில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜெய்யின் பல படங்களில் வெங்கட் பிரபு ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு ஜெய் இன் அடுத்த படத்தை இயக்குவதற்காக ஜெய்யை மனதில் வைத்து எழுதப்பட்ட கதைதான் மாநாடு.
அதன் பிறகு ஒரு சில காரணங்களால் இப்படத்தில் ஜெய் நடிக்க முடியாமல் போக அதன் பின்பு சிம்பு தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அப்படத்தில் அப்துல் காளிக்கு பொருத்தமாக இருந்தார் சிம்பு. ஆனால் மாநாடு படத்தில் ஜெய் நடித்திருந்தால் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்று இருக்குமா என்பது சந்தேகம்தான்.
நல்ல வேளை இந்த கதைக்கு சிம்பு தேர்வு செய்யப்பட்டார். ஜெய் நடித்திருந்தால் இந்த படம் நிச்சயமாக நன்றாக போயிருக்காது. வெங்கட்பிரபுவிற்கு ஏதோ நல்ல நேரம் இருந்திருக்கிறது. கடவுள் காப்பாற்றி விட்டார்.
நடிகர் ஜெய் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. தற்போது வீரபாண்டியபுரம் என்ற படத்தில் ஜெய் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் ஜெய் இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். மாநாடு படத்தை தவறவிட்ட ஜெய் வீரபாண்டியபுரம் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.