நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ள படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் மார்ச் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான காதல் கதையாக இது இருக்கும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த படங்கள் பல தோல்வியை சந்தித்து வருவதால் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த சமயத்தில் விஜய் சேதுபதி பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட இவருக்கு ஹீரோ கதாபாத்திரத்தை பட வில்லன் கதாபாத்திரம் நன்றாகத்தான் இருக்கிறது என்ற அவரது ரசிகர்களும் அவரை கொண்டாடுகின்றனர்.
இருந்தாலும் அவரது கலைத்தாகத்தை தீர்ப்பதற்காக வாரத்திற்கு 2 படம் என்று தொடர்ந்து படத்தை ரிலீஸ் செய்து அவர்களின் ரசிகர்களை சலிக்க வைத்துவிடுவார் விஜய் சேதுபதி. இப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில், தற்போது அவர் விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். பயங்கரமான வில்லனாக தோன்றுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
இப்படி இருக்கையில், இவர் நடித்து வெளியாக காத்து கொண்டிருக்கும் காத்து வாக்குல இரண்டு காதல் மற்றும் இந்த விக்ரம் திரைப்படம் ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறியிருக்கின்றார். ஏனென்றால் அவருக்கு தொடர்ந்து படங்கள் தோல்விப் படங்களாக அமைந்ததால், இப்படி ஒரே நேரத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கினால் மக்கள் மனதை வென்று விடலாம் என்று நினைத்திருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் விஜய் சேதுபதியின் படங்களை பார்ப்பதற்கு ஒரு கூட்டமே கூடும். இவர் நடித்தால் போதும், அந்தப்படம் மிகப் பெரிய ஹிட்டடிக்கும் என்றும் கூறப்படுவது உண்டு. அப்படி இருக்கக் கூடிய காலகட்டம் மாறி, தற்போது விஜய் சேதுபதி படம் என்றாலே தெறித்து ஓடும் அளவிற்கு தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி ஒரு படம் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாமல் ஆகும் வரை நடித்து, அவரது ரசிகர்களை கலங்க செய்கிறார், இப்படி இருக்கையில் தான் பல நடிகர்களோடு சேர்ந்து, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களை கவர நடித்து வருகிறார்.
எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்களுக்கு பிடிக்க வேண்டுமென்றால் படத்தில் கதை என்று ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இப்படி கதையே இல்லாமல் படம் நடித்து விட்டு, இன்டெர்வியூவில் மட்டும் கதை கதையாக அளந்து விட்டால் எப்படி மக்களுக்கு பிடிக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. ஆனால், விஜய் சேதுபதிக்கு இந்த காத்துவாக்குல இரண்டு காதல் மற்றும் விக்ரம் படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார்.
இந்த ரெண்டு படங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே, விஜய் சேதுபதி எனும் ஒரு நடிகர் மீண்டு எழுந்து வர முடியும். இல்லை என்றால் வினித், அப்பாஸ் போல வந்தார், போனார், விளம்பரம் நடித்தார் என்று ஆகிவிடும். இதனால் இரண்டு படக்குழுவிடம் கெஞ்சி ஒரே நாளில் இந்த படங்களை வெளியிடுங்கள் என்று கூறியுள்ளாராம் விஜய்சேதுபதி. ஒரு படத்தில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் வில்லனாகவும் தனது முழு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மக்கள் செல்வன்.