ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இறந்த பின்னும் வெளிவந்த பிரபல நடிகரின் 14 படங்கள்.. குடிபோதையால் நாசமாய் போன பரிதாபம்!

ஒரு நடிகர் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்றால் அவருடைய நடிப்பில் ஆரம்பித்து அவருடைய குரல் வளம் அவர் நடிக்கும் விதம் என அத்தனையும் தனித்து தெரிய வேண்டும். அப்படி நடிப்பில் தனித்து தெரியக் கூடிய ஒரு ஆள்தான் நடிகர் எம் ஆர் ராதா. அவரைப் போல மிகவும் வித்தியாசமான குரலுக்கும் நகைச்சுவை நடிப்பிற்கும் உரியவர் தான் நடிகர் சுருளிராஜன். தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத கட்டமைப்பை தனது நடிப்பால் உருவாக்கியவர் தான் இந்த சுருளிராஜன்.

பெருவாரியான சினிமா பின்னணி எதுவும் இல்லாமல் சினிமா உலகிற்குள் நுழைந்த சுருளிராஜன் 1980-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 50 திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய சாதனை படைத்தவர். இந்த சாதனையை இதுவரைக்கும் எந்த ஒரு நடிகரும் நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டில் வந்த அத்தனை படங்களிலும் சுருளிராஜனின் கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தது.

எந்த வேடம் கொடுத்தாலும் அப்படியே ஏற்று நடிக்கக்கூடிய நடிகர் அவர். அதுமட்டுமின்றி அவர் இறந்த பின்பும் கூட அவர் நடித்த 14 படங்கள் ரிலீசாகி இருந்தது. இப்படி கொடிகட்டிப் பறந்த ஒரு காமெடி நடிகர் தன்னுடைய தீராத மது பழக்கத்தினால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு தன்னுடைய இறுதி நாட்களில் மிகுந்த துன்பம் அடைந்தார்.

அவர் அப்படி இறந்த பின்பு விட்டுச் சென்ற இடத்தில்தான் தற்போது கவுண்டமணி-செந்தில் போன்ற பல காமெடி கலைஞர்கள் உருவாகி இருக்கின்றனர். 70-களின் தொடக்கத்தில் மேடை நாடகங்கள் தான் மிக பெரிய அளவில் சினிமாவிற்கு பாலமாக இருந்தது. அந்த பாலத்தில் பயணித்து வந்தவர்தான், இந்த சுருளிராஜன்.

1980ஆம் ஆண்டு தன்னுடைய 42வது வயதில் அவர் உயிர் இழந்த பிறகும் கூட அவர் நடித்த 1980இல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முரட்டுக்காளை திரைப்படம் இந்த திரைப்படத்தில் ஆரம்பித்து அதன் பிறகு இறந்த மறுநாளே ரிலீஸான பொல்லாதவன், சட்டம் என் கையில், நான்கு கில்லாடிகள், ராம் லக்ஷ்மனன், ஹிட்லர் உமாநாத் என அவர் நடித்த பல படங்கள் அவர் இறந்த பின்புதான் வெளியானது.

அந்த படங்களில் அவர் ஏற்று நடித்திருந்த அத்தனை கதாபாத்திரத்திலும் வித்தியாசங்கள் பல கொடுத்து மிக நேர்த்தியாக நடித்திருப்பார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறிது என்றாலும் அவரின் அர்ப்பணிப்பான நடிப்பிற்காக அதிகமாக பேசக்கூடியவர். காமெடி நடிகராக மட்டுமில்லாமல், குணச்சித்திர வேடம் போன்ற பல வேடங்களில் ஏற்று நடித்து இருந்தால், ரஜினி, கமல், சிவாஜி, ஜெய்சங்கர் என அத்தனை தலைமுறை நடிகர்களோடும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்த பெருமை இவர்க்கு உண்டு.

Trending News