புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இணையத்தில் லீக்கானது பீஸ்ட் பட காட்சிகள்.. என்னடா நெல்சா இது? கடுப்பில் சன் பிக்சர்ஸ்

நடிகர் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படம் தற்போது இறுதிகட்ட பணிகளில் இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் தற்போது சமூக வலைதளத்தின் ஹாட் டாப்பிக்காக இருப்பது பீஸ்ட் திரைப்படம்தான். திரைப்படத்தின் முக்கியமான சில காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் லீக்கானது என்ற செய்தி நேற்று இரவிலிருந்து காட்டுத்தீயாக பரவி இருக்கிறது. பலரும் அப்படி தங்களுக்கு கிடைத்த போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதனை அதிகமாக பரப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட பணிகளான டப்பிங் வேலைகள் டப்பிங் ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. அப்படி இருக்கையில் டப்பிங் செய்ய வந்த கலைஞர்களில் சிலர் பீஸ்ட் படத்தின் முக்கியமான சில காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கின்றனர். இதை பார்த்த சமூக வலைதள வாசிகள் அதிர்ந்து போய் இருக்கின்றனர். படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் முக்கியமான காட்சிகளில் புகைப்படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றனர்.

வெளியான புகைப்படத்தில் விஜய் ஒரு காட்சியில் யாருக்கோ டென்ஷனாக போன் செய்வது போலவும், மற்றொரு காட்சியில் சட்டையில் ரத்தத்துடன் நடந்து வரும் காட்சியும், தீவிரவாதிகள் சிலருடன் சண்டையிடும் காட்சியும் இடம்பெற்றிருக்கிறது. இதே போல படம் முழுக்க துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதாம். துப்பாக்கிகளை மையமாக வைத்துதான் படத்தின் மையக்கதையே நகர்கிறதாம்.

அப்படி துப்பாக்கியை வைத்து விஜய் போடும் சண்டைக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளதால், இதைப்பார்த்த சன் பிக்சர்ஸ் கோபத்தின் உச்சத்துக்கு சென்று இருக்கிறது. அதனால் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் சமூக வலைதள பக்கங்களை அதிரடியாக சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து முடக்கி வருகிறது. படத்தின் பட்ஜெட் ஆரம்பித்து, தளபதி விஜய் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கக்கூடிய இந்த சமயத்தில் இப்படி படத்தின் முக்கியமான காட்சிகள் வெளியானதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருக்கின்றனர்.

ஆனால் பல சமூக வலைதள வாசிகள் இதனை தங்களுடைய பக்கத்தில் பகிர்ந்து வருவதையும் விஜய் ரசிகர்கள் பகிரங்கமாக கண்டித்து வருகின்றனர். ஆனாலும் வாட்ஸ்அப் வழியாகவும் பேஸ்புக் டுவிட்டர் வழியாகவும் இந்த புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றது. ஒரு படத்தின் காட்சிகள் வெளியாகும் அளவிற்கு ஏன் இவ்வளவு அலட்சியம், இதைக் கூடவா பார்க்க முடியவில்லை என்று விஜய் ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் மீதும், படக்குழுவின் மீதும் மிகுந்த கடுப்பில் இருக்கின்றனர். படத்தில் வேலை செய்யும் கலைஞர்களே இப்படி செய்வது சரியா என்று ஒருபக்கம் விஜய் ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.

Trending News