வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கதையை மாற்ற சொன்ன கமல்.. ஹீரோவையே மாற்றி வெற்றி கண்ட ஷங்கர் 

உலக நாயகன் கமலஹாசனை பற்றி பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அதைத் தாண்டி அவரைப் போற்றும் வகையில் பல நன்மைகள் செய்துள்ளார். கமலஹாசன் தன்னை விட வயதில் குறைவாக உள்ளவராக இருந்தாலும் ஒருமையில் பேச மாட்டார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் ஜென்டில்மேன். ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமல் தான் நடிக்க வேண்டியிருந்தது. இந்த படத்தின் கதையை ஷங்கர் முதலில் கமலிடம் சொன்னபோது இந்தக் கதை நன்றாக உள்ளது ஆனால், சின்னச் சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும் என கமல் சொல்லியுள்ளார்.

ஆனால் இந்த சின்ன மாற்றங்களால் படத்தின் கதையில் நிறைய மாற்றம் ஏற்படும் என யோசித்து உள்ளார் இயக்குனர் ஷங்கர். இதை புரிந்து கொண்ட கமல் இந்தப் சில சில மாற்றங்கள் செய்து படத்தை வேறு ஒரு நடிகர் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

ஏனென்றால் இவர் என்ன இப்படி சொல்கிறார், நான் அப்படி யோசித்தேன் என இருவரும் நினைக்க வேண்டாம். அதுமட்டுமல்லாமல், இருவருக்கும் மன சங்கடம் இருக்காது, இதனால் வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை இயக்கங்கள் என ஷங்கருக்கு கமல் அறிவுரை கூறியுள்ளார்.

அதன்பின்பு ஷங்கர் நடிகர் அர்ஜுன் வைத்து ஜென்டில்மேன் படத்தை இயக்கினார். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன்பிறகு ஷங்கரும், கமலும் இணைந்து இந்தியன் படத்தில் பணியாற்றி இருந்தனர். இப்படமும் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

Trending News