வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய்காக முட்டி மோதும் 3 பெரும் தலைகள்.. வசூல் ராஜாவாக கெத்து காட்டும் தளபதி

தற்போது விஜய், நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை அடுத்து அவர் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இதையடுத்து விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இதில்தான் அவருக்கு தற்போது ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அது என்னவென்றால் இந்த படத்திற்கு யாரை தயாரிப்பாளராக முடிவு செய்யலாம் என்ற அதீத குழப்பத்தில் விஜய் தற்போது இருக்கிறார். அவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் விஜய் மனதில் மூன்று தயாரிப்பாளர்களை முடிவு செய்து வைத்திருக்கிறார். கலைப்புலி தாணு, ஏஜிஎஸ் நிறுவனம், லலித் ஜெகதீஷ் என ஒரு பட்டியலையே அவர் வைத்திருக்கிறார். இவர்களில் ஒருவரைத்தான் தன்னுடைய அடுத்த படத்தில் தயாரிப்பாளராக அவர் முடிவு செய்திருக்கிறார்.

இதன்படி பார்த்தால் கலைப்புலி தாணுவுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்று தெரிகிறது. மேலும் தயாரிப்பாளர் லலித்தும் விஜய்யை வைத்து படம் தயாரிப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார். இப்படி ஒரு குழப்பத்தில் தான் விஜய் தற்போது மண்டையை பிய்த்துக் கொண்டு இருக்கிறார்.

ஆனால் நிச்சயமாக இந்த மூன்று நிறுவனங்களை ஒரு நிறுவனம் தான் அவரை வைத்து படத்தை தயாரிக்க போகிறது என்பது உறுதி. அப்புறமென்ன யாரிடமிருந்து முதலில் பெட்டி அல்லது செக் வருகிறதோ அவர்களுக்கு தலையை ஆட்டி விட வேண்டியதுதான்.

Trending News