அடுத்த அஜித்தாக மாறும் சிவகார்த்திகேயன்.. ஏற்றிவிட்ட மார்க்கெட்டை இறக்க சதி

டாக்டர் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் தற்போது வசூல் ராஜாவாக மாறி இருக்கிறார். அதனால் அவரின் கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் இருக்கிறது. அந்த வரிசையில் இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த மாதம் பூஜையுடன் ஆரம்பித்த இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது காரைக்காலில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அவரின் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கே அவரை காண வந்து விடுகிறார்களாம்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ரசிகர்களை கண்ட அவரும் அவர்களுடன் சிரித்து பேசி நேரம் செலவிடுகிறாராம். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படும் ரசிகர்களிடம் சூட்டிங் 6 மணிக்கு முடியும் அப்போது வாருங்கள் என்று சொல்கிறாராம்.

அதோடு மட்டுமல்லாமல் படப்பிடிப்பு முடிந்ததும் ரசிகர்கள் அனைவருடனும் ஜாலியாக போட்டோவும் எடுத்துக் கொள்கிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகவும் குஷியாக இருக்கின்றனர். அதே போல் சிவகார்த்திகேயன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவருடனும் மிகவும் கலகலப்பாக இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இந்த மாதிரி செய்யும் ஹீரோக்களை எப்பொழுதுமே வளர விட மாட்டார்கள். சிவகார்த்திகேயனின் இந்த செயலால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் மற்ற ஹீரோக்கள் அவரை வளர விடுகிறார்களா என்று பார்போம்.

அங்கு பணியாற்றி வரும் டெக்னீஷியன்கள் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் அவருடைய கையாலேயே மதிய உணவு பரிமாறி ஆனந்தமாக நேரத்தை கழித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தளம் பிக்னிக் ஸ்பாட் போல இருக்கிறதாம்.

இதையேதான் நடிகர் அஜித்தும் செய்து வருவார். இப்பொழுது சற்று அமைதியாக மாறிவிட்ட அவர் ஆரம்ப காலங்களில் தன்னுடன் பணிபுரியும் டெக்னீசியன்கள் அனைவருடனும் சேர்ந்து உணவு சாப்பிடுவது, அவர்களுக்காக பிரியாணி சமைத்துக் கொடுப்பது என்றெல்லாம் ஜாலியாக பொழுதை போக்குவார். தற்போது சிவகார்த்திகேயனும் அஜித்தின் பாணியை பின்பற்றி வருகிறார்.