நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் கூடிய விரைவில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இதையடுத்து விஜய் தன்னுடைய 66 வது படத்திற்கு தயாராகி இருக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் வம்சி இயக்குகிறார்.
தில்ராஜு தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டு வந்தனர்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக முக்கிய பிரபலம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு தேடி வந்தது.
இந்நிலையில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் இவர் நடிகர் அஜித்தின் விவேகம் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருக்கிறார்.
அதை தொடர்ந்து இவர் முதல் முறையாக விஜய்க்கு வில்லனாக இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சமீபகாலமாக விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகர்கள் தான் நடித்து வருகிறார்கள் அந்த வரிசையில் விவேக் ஓபராய் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
ஏற்கனவே விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதில் பிரபல பாலிவுட் ஹீரோவும் இணைந்திருப்பதால் அவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.