தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடந்தாண்டு சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார்.
ஜெய் பீம் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பழங்குடி மக்களின் வாழ்க்கை ஆதாரத்தை பற்றி எடுக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தது. அதன் பிறகு ஜெய் பீம் படம் பல சர்ச்சைகளுக்கும் உள்ளானதால் சில காட்சிகள் நீக்கப்பட்டது.
ஆனால் ஜெய்பீம் படத்தை அரசியல் தலைவர்கள் முதல் அனைத்து பிரபலங்களும் பாராட்டினர். ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் கிடைத்ததுடன் ஜெய் பீம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஜெய்பீம் படத்திலிருந்து பல போராட்டங்களுக்கு பின் மீண்டு வந்துள்ளார் சூர்யா.
இப்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை தியேட்டரில் ரிலீசாகிறது. இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆனால் வழக்கமாக சூர்யாவிற்கு கிடைக்கும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. தியேட்டர்கள் டிக்கெட்டுகளும் முழுவதுமாக விற்கப்படாமல் எல்லா தியேட்டர்களிலும் குறைந்தபட்ச டிக்கெட்டுகளை விற்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக சூர்யாவின் படங்கள் எல்லாம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது. சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகிறார்கள். இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சூரரைப் போற்று, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஜெய் பீம், உடன்பிறப்பே ஆகிய படங்கள் ஓடிடிவியில் வெளியானது.
இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சூர்யா மீது கடும் கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் டிக்கெட்டுகள் விற்பதற்கு காரணம் ஜெய் பீம் படத்தில் வந்த பிரச்சனையா அல்லது தியேட்டர்களில் சூர்யா படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று விநியோகஸ்தர்கள் ஏதும் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று தெரியவில்லை.